Saturday, August 8, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

தேசிய பொசொன் நிகழ்வுக்கு அரசாங்கம் அனுசரணை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது

by editor
June 1, 2023
in இலங்கை
0 0
A A
0
கோழி,முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது
Share on FacebookShare on Twitter

02 அமைச்சுக்கள் மற்றும் ஒரு திணைக்களத்தினால் மாத்திரம் 288 இலட்சம் ரூபா ஏற்கனவே ஒதுக்கீடு

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரச பொசொன் நிகழ்வுக்கும், மிஹிந்தல புனித பூமியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பொசொன் நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பில் புத்த சாசன, மத, கலாச்சார அலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், அனுராதபுரம் மாவட்ட செயலகம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, லேக்ஹவுஸ் நிறுவனம் என்பவற்றிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் மூலம் பின்வரும் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

1963 ஆம் ஆண்டு ரஞ்சித் விஜேவர்தனவின் கருத்தின்படி அப்போதைய லேக்ஹவுஸ் நிறுவனம் தனது சமய மற்றும் சமூகப் பணிகளுக்காக லேக்ஹவுஸ் மிஹிந்தல ஆலோக பூஜையை ஆரம்பித்தது. அதன் பின்னர் 59 வருடங்களாக ஆலோக பூஜை, பிரித்ஓதல், பெரஹரா, சைத்தியவிற்கு நிறம்பூசுதல் உள்ளிட்டவற்றுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.

2020 / 2021 கொவிட் சமயத்திலும், 2022 ஆம் ஆண்டிலும் முறையே 4.6 மில்லியன் ரூபா, 2.3 மில்லியன் ரூபா மற்றும் 2.9 மில்லியன் ரூபா என உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு முதல் லேக்ஹவுஸ் தொடர்ச்சியான நட்டத்தை ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளதோடு 2022 ஆம் ஆண்டில் 192 மில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக இவ்வருடம் இவ்வாறான வேலைத் திட்டங்களுக்கு அனுசரணை வழங்க முடியாது என லேக்ஹவுஸ் நிர்வாகம் மிஹிந்தல பொசொன் குழுவிற்கு அறிவித்துள்ளது.

மிஹிந்தல பொசொன் பெரஹரவிற்காக மட்டும் மிஹிந்தல ரஜமஹா விஹாராதிபதி வணக்கத்திற்குரிய வலஹங்குனவெவ தம்மரதன தேரரிரினால் அனுராதபுரம் மாவட்ட செயலாளருக்கு 170 இலட்சம் ரூபா மதிப்பீட்டுத் தொகையொன்றை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

ஆனால் பாராளுமன்றத்தினால் விதித்துள்ள அரச விதிமுறைகளின் பிரகாரம் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்க முடியாது என அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன அறிவித்துள்ளார். 2023 தேசிய பொசொன் நிகழ்வுக்கு 30 லட்சம் ரூபா ஒதுக்க வரவு செலவுத்திட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக ஒரு இலட்சம் ரூபா வழங்க முடியும் எனவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சுக்களின் அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளில் 6% வீதத்தை குறைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ள போதும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு குறித்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பொசொன் நிகழ்வை முன்னிட்டு நீர்விநியோகம் வழங்குவதற்காக 15.7 மில்லியன் ரூபா செலவிட நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைத்தலைவர் நிசாந்த ரணதுங்க தெரிவித்தார்.பொசொன் வலயம் அமைப்பதற்காக முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

பொசொன் நிகழ்வுக்கு வரும் சுமார் 60 ஆயிரம் பக்தர்களுக்கு பகலுணவு வழங்க அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களும் பங்களிப்பு செய்ய இருப்பதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஜே.கே ஜெயசுந்தர தெரிவித்தார்.மலசலகூட வசதி அளிக்க அநுராதபுரம் நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு ரயில் திணைக்களம் விசேட போக்குவரத்து ஒழுங்குகளை முன்னெடுத்துள்ளது.இபோச வும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் இணைந்து விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்க இருப்பதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

தேசிய பொசொன் நிகழ்விற்காக 10 மில்லியன் ரூபா அனுப்பியுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் கே.டீ.என். ரஞ்சித் தெரிவித்தார்.

இதற்கமைய இரு அமைச்சுக்கள் மற்றும் ஒரு திணைக்களத்தின் ஊடாக மாத்திரம் 28.8 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. இது தவிர மேலும் மாவட்ட செயலகம்,பிரதேச செயலங்கள்,நகர சபை,பிரதேச சபைகளின் ஊடாக மேலும் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பின்னணியில் 2023 தேசிய பொசொன் நிகழ்விற்கு அரசாங்க அனுசரணை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts

மோட்டார் சைக்கிள் செலுத்தும் போது SLS சான்றிதழ் பெற்ற பாதுகாப்புத் தலைக்கவசம் அணிவது கட்டாயம்…!…!
இலங்கை

மோட்டார் சைக்கிள் செலுத்தும் போது SLS சான்றிதழ் பெற்ற பாதுகாப்புத் தலைக்கவசம் அணிவது கட்டாயம்…!…!

August 7, 2026
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு – பொதுமக்களுக்கு அவதானிப்பு அறிவிப்பு
இலங்கை

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு – பொதுமக்களுக்கு அவதானிப்பு அறிவிப்பு

August 5, 2026
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்
இலங்கை

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

July 18, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022
ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

October 4, 2023

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மோட்டார் சைக்கிள் செலுத்தும் போது SLS சான்றிதழ் பெற்ற பாதுகாப்புத் தலைக்கவசம் அணிவது கட்டாயம்…!…!

மோட்டார் சைக்கிள் செலுத்தும் போது SLS சான்றிதழ் பெற்ற பாதுகாப்புத் தலைக்கவசம் அணிவது கட்டாயம்…!…!

August 7, 2026
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு – பொதுமக்களுக்கு அவதானிப்பு அறிவிப்பு

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு – பொதுமக்களுக்கு அவதானிப்பு அறிவிப்பு

August 5, 2026
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

July 18, 2026
சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

July 18, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version