கோழி இறைச்சி மற்றும் முட்டையினை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மீனின் விலை அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சி வியாபாரிகள் அநாவசிய இலாபம் பெறும் நோக்கில் விலையை அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.
கோழி மற்றும் முட்டை தொழில்துறையினருடன் நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.




Discussion about this post