மடத்துகம நகருக்கு அருகில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூன்று சிறுமிகள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மடத்துகம பொலிஸார் தெரிவிதுள்ளனர். 15, 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுமிகளே இவ்வாறு தப்பி ஓடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் கலென்பிடுனுவெவ, நொச்சியாகம மற்றும் தலாவ பிரதேசங்களில் வசிக்கும் சிறுமிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த மூன்று சிறுமிகளும் இந்த பராமரிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்குது.




Discussion about this post