காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலான டைட்டனின் உடையது என நம்பப்படும் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தேடுதல் நடவடிக்கையின் போது, நீருக்கடியில் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளுக்கு அருகில் இந்த பாகங்களை கண்டுபிடித்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள ஆக்சிஜன் தீர்ந்துவிடுவதற்கு 96 மணித்தியாலம் எடுக்கும் ஆனால் தற்போது 96 மணித்தியாலங்களை விட அதிக நேரம் கடந்து விட்டது.. கப்பலைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுக்கள் விரைந்து செயற்பட்டு வரும் நிலையில், காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த ஐந்து பயணிகளும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது என கப்பல் நிறுவனம் கூறுகிறது.
டைட்டன்ஸ் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 5 பேரும் இறந்துவிட்டதாகக் கருதப்படுவதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்ததை அடுத்தே இந்த அறிவிப்பு விடப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் உடல்களை கண்டுபிடிக்க முடியுமா என்பதை உறுதி செய்ய முடியாது.
இது கடலின் அடியில் உள்ள உச்ச அமுக்கத்தினால் (பாரிய வெடிப்பு) வெடித்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.





Discussion about this post