அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் (22.06.2023) சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (23.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.96 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 240.36 ரூபாவாகவும், கொள்வனவு விலை 225.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 346.86 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 327.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 402.51 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 380.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.






Discussion about this post