Saturday, May 16, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

112,7625 வழக்குகள் நிலுவையில்! 10 இலட்சம் பேருக்கு 18 நீதிபதிகளே உள்ளனர் – நீதியமைச்சர்

by editor
July 7, 2023
in இலங்கை
0 0
A A
0
நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!
Share on FacebookShare on Twitter

குற்றவியல் மேல் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் மூன்றில் ஒரு பகுதி சிறுவர் மற்றும் பெண் துஷ்பிரயோக குற்றச்சாட்டு வழக்குகளாகும், இலங்கையர் என்ற ரீதியில் இதனையிட்டு வெட்கமடைய வேண்டும்.

நாடளாவிய ரீதியில் உள்ள நீதிமன்றங்களில் ஒட்டுமொத்தமாக 1127625 வழக்குகள் நிலுவையில் உள்ளன என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) இடம்பெற்ற ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளதை நியாயப்படுத்த முடியாது.மொத்த சனத்தொகையில் 10 இலட்சம் பேருக்கு 18 நீதிபதிகள் இருப்பது சிறந்த சூழலல்ல, 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 174 நீதிமன்றங்களை ஸ்தாபிக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினார்கள்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் புதிய நீதிமன்றங்கள் மற்றும் நீதிமன்ற கட்டடத்தொகுதிகளை ஸ்தாபிப்பது சாத்தியமற்றதாகியது.

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் புதிதாக 30 நீதிமன்றங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 11 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதி திறந்து வைக்கப்படவுள்ளது. அத்துடன் வெலிமடை பகுதியிலும் புதிய நீதிமன்றம் இந்த மாதத்துக்குள் ஸ்தாபிக்கப்படும்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிக்கப்பட்டது.உயர்நீதிமன்றத்தில் 5482 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆகவே 1 நீதியரசர் சுமார் 322 வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய வேண்டும்.

நாட்டில் 10 மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் உள்ளன. 20 நீதிபதிகள் சேவையில் உள்ளார்கள். 2022 ஆம் ஆண்டு தரப்படுத்தலுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் 3423 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆகவே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 1 நீதிபதி 171 வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய வேண்டும்.

22 சிவில் குற்றவியல் நீதிமன்றங்களில் 6800 வழக்குகளும்,குற்றவியல் மேல் நீதிமன்றத்தில் 29723 வழக்குகளும்,மாவட்ட நீதிமன்றங்களில் 263481 வழக்குகளும், நீதவான் நீதிமன்றங்களில் 803642 வழக்குகளும், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான நீதவான் நீதிமன்த்தில் 1108 வழக்குகளும்,தொழில் நியாய சபைகளில் 5225 வழக்குகளும் நிலுவையில் உள்ளன ஆகவே ஒட்டுமொத்தமாக 11 27265 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உயர்நீதிமன்றம் முதல் நீதவான் நீதிமன்றங்கள் வரை 399 நீதிபதிகள் மாத்திரமே சேவையில் உள்ளார்கள்.

குற்றவியல் மேல் நீதிமன்றங்களில் 5550 சிறுவர் துஸ்பிரயோக வழக்குகளும்,4312 பெண் துஸ்பிரயோக வழக்குகளும் நிலுவையில் உள்ளதையிட்டு இலங்கையர் என்ற ரீதியில் வெட்கப்பட வேண்டும்.

சட்டங்கள் கடுமையானால் குற்றங்கள் குறைவடையும் என்ற காரணத்தால் கடந்த ஏழு மாத காலத்துக்குள் மாத்திரம் 25 சட்டமூலங்கள் இயற்றிக் கொள்ளப்பட்டன.3298 மனித படுகொலை வழக்குகளும்,3376 அபாயகர வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

ஆகவே எதிர்வரும் காலங்களில் இந்த வழக்கு விசாரணைகளை நிறைவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்றார்.

Related Posts

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!
இலங்கை

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..
இலங்கை

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 8, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 8, 2026

Recent News

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 8, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version