குவைத் நாட்டிற்கு வீட்டு பணிப்பெண்களாக சென்று அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 46 இலங்கையர்கள் அங்கிருந்து நேற்று அனுப்பப்பட்டுள்ளதுடன் நேற்று அதிகாலை அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் நீண்டகாலமாக குவைட் நாட்டில் சட்டவிரோதமாக விசா எதுவுமின்றி தங்கியிருந்துள்ளதுடன் பின்னர் அவர்கள் பல்வேறு நோய்களுக்குள்ளாகியும் தனிப்பட்ட சிக்கல்கள் மற்றும் அவர்களின் இலங்கையிலுள்ள குடும்பங்களுடன் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவும் அங்கு தங்கியிருந்ததுடன் அவர்கள் இலங்கைக்கு வருவதற்காக இலங்கை தூதுவராலயத்தில் பதிவுசெய்திருந்தனர்.
இதுவரை அவ்வாறு வீட்டுப் பணிப்பெண்களாக சென்றிருந்த 2000 க்குமதிகமான இலங்கையர்கள் குவைட் இராஜ்ஜியத்தின் தூதுவராலயத்தில் பதிவுசெய்துள்ளதாக அங்குள்ள தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.




Discussion about this post