இரத்தினபுரி, லெல்லுபிட்டிய வெலிமலுவ பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை ஒன்றில் நேற்று (23) தீ பரவியுள்ளது.
இத்தீவிபத்தால் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியுள்ளதுடன், தேயிலைத் தொழிற்சாலையின் பிரதான கட்டிடமும் தொழிற்சாலைக்குரிய ஐந்து லொறிகளும் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன.
இத்தீச்சம்பவத்துக்கான காரணம் குறித்து இதுவரையிலும் அறியப்படாத நிலையில், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






Discussion about this post