கோபம், பதட்டம் என்பது நாம் வருத்தப்பட வேண்டிய நடத்தைக்கு வழிவகுக்கும். ஆனால் சிலருக்கு தொட்டதுக்கெல்லாம் கோபம் வரும். அதற்கு என்ன காரணம் என்பதை தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
கோபத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நாம் அனுபவிக்கும் கடினமான சூழ்நிலை கூட இதற்கு காரணமாக இருக்கலாம். சில சூழ்நிலைகளை எவ்வாறு விளக்குகிறோம், எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்பதன் காரணம் கூட கோபத்தை உணரவைக்கலாம். நீங்கள் எப்போது கோபமாக உணர்கிறீர்கள் கோபத்துக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள் என்பது உங்கள் வாழ்க்கையில் உள்ள பல காரணிகளை சார்ந்தது. அப்படியான காரணிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
பக்கவாதம் ஏற்பட்ட பிறகு மனநிலையை நிர்வகிப்பது கடினமாக இருக்கலாம். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவும் மூளையின் ஒரு பகுதியில் சேதம் ஏற்பட்டால், விரக்தியாகவும் கவலையாகவும் இருப்பது போன்ற உணர்வு வரும். உடன் சோகமாகவும் கோபமாகவும் உணர்வதும் இயல்பு தான். இதை தடுக்க யோகா போன்ற பயிற்சிகள் செய்வது மனதை அமைதிப்படுத்த உதவும்.
ஆட்டிசம் என்னும் பாதிப்பு இருந்தால் திட்டமிடப்படாத மாற்றத்தை கையாள்வது கடினமாக இருக்கும். உங்கள் அன்றாடை வாழ்க்கையில் எளிய இடையூறு இருந்தாலும் உங்களை தடுத்துவிட போதுமானதாக இருக்கும்.
ஆட்டிசம் இருப்பவர்களுக்கு ஆக்கிரமிப்பு, உரத்த ஒலிகள், சத்தங்களுக்கு அதிகப்படியான எதிர்வினை ஆற்ற தூண்டும். மேலும் அவர்களை காயப்படுத்தி கொள்வதே கூட ஆட்டிச இறுக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் கோபத்தில் என்ன செய்கிறோம் என்று அறியும் அளவுக்கு நிதானமாக இருக்க மாட்டார்கள்.
இரத்த சர்க்கரையில் பெரிய சரிவு நடத்தையில் பெரிய மாற்றம் கொண்டு வரும். உடல் ஆரோக்கியத்தில் சில பக்கவிளைவுகளை உண்டு செய்வது போன்று அன்றாட வாழ்க்கையிலும் மாற்றத்தை உண்டு செய்யும். இவர்கள் திடீரென்று அழுவதையோ அல்லது குழப்பமாக இருப்பதையோ அல்லது உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுவதையோ கொண்டிருக்கலாம். சிறிது காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் குறைந்த இரத்த சர்க்கரையின் இலேசான அறிகுறிகள் உங்களிடம் இல்லாமல் இருக்கலாம். உடற்பயிற்சியும், யோகாவும் உங்கள் மன அழுத்தத்தையும் கோபத்தையும் குறைக்க செய்யலாம்.
தைராய்டு சுரப்பி அதிகமாக வேலை செய்தால் அது உங்களை பதட்டமாகவும் , அமைதியற்றதாகவும் வைத்திருக்கும். சில நேரங்களில் கவலையாக வைத்திருக்கும். இன்னும் சில நேரங்களில் எரிச்சலுடன் வைத்திருக்கும். சிலருக்கு அதிக கோபத்தை உண்டு செய்யலாம். இதனோடு குடல் பிரச்சனைகள் போன்ற பிற அறிகுறிகளும் உங்களுக்கு இருக்கலாம்.
மாதவிடாய் முன்நோய்க்குறி (பிஎம்எஸ்) இருக்கும் போது எரிச்சல் மற்றும் கோபம் இயல்பானது. மாதவிடாய்க்கு 1 அல்லது 2 வாரங்களுக்கு முன்பு நீங்கள் கட்டுப்பாடற்ற கோபங்கள் மற்றும் தீவிரமான மனநிலை இருப்பதை அறிந்தால் மாதவிடாய் முன் டிஸ்ஃபோரிக் கோளாறு எனப்படும் கடுமையான நிலையை கொண்டிருக்கலாம். சிகிச்சையுடன் நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்த யோகா போன்றவற்றை செய்யலாம்.







Discussion about this post