அம்பலாந்தோட்டை பேரகம மஹர பகுதியில் இரவு 7.20 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
திடீரென பலத்த சத்தம் ஏற்பட்டு வீட்டினுள் நிலம் அதிர்ந்ததாக அம்பலாந்தோட்டை மஹர பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வீட்டின் கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டதாகவும், அருகில் உள்ள பல வீடுகளுக்கும் இந்த சத்தம் கேட்டதாகவும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனபோதும், அவ்வாறான நிலநடுக்கம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என ஹம்பாந்தோட்டை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.






Discussion about this post