வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் பூஜை அறை மட்டுமல்ல சுவாமி படங்களை எந்த திசையில் வைக்கிறோம் என்பது மிகவ அவசியமாகும். அதே போல் ஒவ்வொரு சுவாமி சிலை அல்லது படத்தை வைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட திசையே சரியானது. இப்படி வைப்பதால் மட்டுமே அந்த தெய்வத்தின் அருளை நாம் முழுமையாக பெற முடியும். இவற்றை மாற்றி வைக்கும் போது சில சமயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
அதே போல் சிவ பெருமானின் எந்த ரூபத்தை வீட்டில் வைக்க வேண்டும், எந்த ரூபத்தை வைத்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்ற முறை உள்ளது. இவற்றை இங்கு தெளிவாக காணலாம். சிவனின் சி ரூபங்களை வீட்டில் வைத்தால் பணம் வீட்டில் தங்காமல், செலவாகிக் கொண்டே இருக்கும். அதோடு பலவிதமான கஷ்டங்களும் வந்து சேரும். வீட்டில் சிவலிங்கம் வைத்திருந்தால் தினமும் அதற்கு முறையாக பூஜை செய்யவில்லை என்றால் சிவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
அனைவருக்கும் தங்களுக்கு விருப்பமான தெய்வத்தை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்து வழிபட்டு, அந்த தெய்வத்தின் அருளை பெற வேண்டும் என எண்ணம் இருக்கும். ஆனால் அனைத்து தெய்வங்களின் படமும் வீட்டில் வைத்து வழிபடுவதற்கு ஏற்றதல்ல. உக்கிர தெய்வங்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது என்பது முறை. சில தெய்வங்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபட்டால் வாஸ்து பட வீட்டில் கஷ்டம் வரும்.
சிவ பக்தர்களுக்கும் சிவ சின்னங்கள், சிவனின் படம், விக்ரஹம் ஆகியவற்றை வைத்து வழிபட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சிவனின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா என்ற குழப்பமும் சிலருக்கு இருக்கும். சிலரின் வீடுகளில் சிவலிங்கம் வைத்து பூஜை செய்வார்கள். ஆனால் சிவ லிங்கம் வைத்து வழிபடுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது அவற்றை சரியாக பின்பற்ற முடிந்தால் மட்டுமே வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபட வேண்டும்.
சிவ லிங்கம் வைக்கும் போது கவனிக்க வேண்டியவை :
சுத்தமான இடத்தில் மட்டுமே சிவலிங்கத்தை வைத்து வழிபட வேண்டும். தினமும் முறையாக அபிஷேகங்கள் செய்து, நைவேத்தியம் வைத்து பூஜை செய்ய முடிந்தால் மட்டுமே சிவலிங்கத்தை வைத்து வழிபட வேண்டும். சிவலிங்கம் மட்டுமல்ல எந்த ஒரு சுவாமி சிலையாக இருந்தாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது நீரால் கழுவி சுத்தம் செய்து, பூஜைகள் செய்ய வேண்டும், வீட்டில் விக்ரஹம் வைத்திருந்தால் அதற்கு தினமும் நைவேத்தியம் படைக்க வேண்டும். சுவாமி சிலை வீட்டில் இருப்பது சுவாமியே வீட்டில் எழுந்தருள்வதற்கு சமம் என்பதால், அவற்றை பட்டினி போட்டால் அந்த தெய்வத்தின் கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டி இருக்கும்.
சிவன் படத்தை வைக்கும் போது கவனிக்க வேண்டியவை :
- சிவன் தியான நிலையில் அமர்ந்து இருக்கும் படத்தை வீட்டில் வைக்கலாம். இதனால் வீட்டில் பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும், அமைதி, செல்வ வளம், குடும்ப மகிழ்ச்சி ஏற்படும்.
- ஏதாவது ஒரு ஜோதிர்லிங்கம் அல்லது 12 ஜோதிர்லிங்கங்கள் ஒன்றாக அமைந்தது போன்ற படத்தை வீட்டில் வைக்கலாம். இது பாசிடிவ் எனர்ஜியை ஏற்படுத்துவதுடன், வீட்டில் இருப்பவர்களுக்கு நன்மை தரும்.
- சிவன் சிலை அல்லது படத்தை வீட்டில் வைக்கும் போது வடக்கு திசையிலேயே வைக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரப்படி, கைலாய மலை வடக்கு திசையிலேயே உள்ளதால் சிவனின் படத்தை வடக்கிலேயே வைக்க வேண்டும்.
வீட்டில் வைக்கக் கூடாத சிவ ரூபங்கள் :
வாஸ்து சாஸ்திரப்படி சிவனின் படங்களை வீட்டில் வைப்பது மிகவும் மங்களகரமானது. இதனால் வீட்டில் அமைதியும், செல்வ வளமும் நிறைந்திருக்கும். ஆனால் சிவனின் அருளை முழுவதுமாக பெற வேண்டுமானால் சில முக்கியமான விஷயங்களை கவனித்தில் கொள்ள வேண்டும்.
சிவ பெருமான் கோபமாக இருப்பது போலவோ அல்லது ருத்ர தாண்டவம் ஆடுவது போலவோ அல்லது சம்ஹாரம் செய்வது போன்ற படங்கத்தையோ வீட்டில் வைக்கக் கூடாது. அதே போல் தாண்டவ மூர்த்தியான நடராஜரின் படத்தையோ அல்லது சிலையையோ வீட்டில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் வீட்டில் பணம் தங்காது. தாண்டவ மூர்த்தி கோலம் என்பதும் உக்கிர வடிவம் என்பதால் அதை வீட்டில் வைப்பது நல்லதல்ல.
சிவன் படங்கள் வைப்பதற்கான விதிகள் :
- உடைந்த அல்லது சேதமடைந்த சிவனின் படம் அல்லது சிலைகளை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. அவற்றை உடனடியாக ஆற்றில் விட்டு விட வேண்டும்.
- சிவன் நின்ற கோலத்தில் இருக்கும் சிலை அல்லது படத்தை வீட்டில் ஒரு போதும் வைக்கக் கூடாது.
- சிவன் சிலை அல்லது படம் நந்தி சிலையுடன் இணைந்து இருப்பது குடும்பத்திற்கு மிகவும் நல்லது.
Discussion about this post