Wednesday, February 4, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home ஆன்மீகம்

இன்றைய ராசிபலன்

by Editor
April 4, 2024
in ஆன்மீகம்
0 0
A A
0
இன்றைய ராசிபலன் (Rasi Palan) – மார்ச் 20, 2024 புதன்
Share on FacebookShare on Twitter

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக் கும். திடீர் செலவுகளும் ஏற்படும். முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் நீங்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வீட்டில் குடும்பத்தினருடன் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர் கள். நண்பர்கள் வகையில் திடீர் ஆதாயம் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் பிற்பகலுக்குமேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். விநாயகரை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். சகோதர வகையில் எதிர்பாராத சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. மாலையில் உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் சற்று சங்கடத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். துர்கை வழிபாடு அளவற்ற மகிழ்ச்சியைத் தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

கடக ராசி அன்பர்களே!

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவசியம் ஏற்பட்டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரவகையில் சங்கடங்கள் உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி அன்பர்களே!

தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புதிய முயற் சிகள் சாதகமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத் தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. வேங்கடேச பெருமாளை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் குடும் பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

துலா ராசி அன்பர்களே!

இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவு களால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். இன்று மகாலட்சுமியை வழிபட பல வகை களிலும் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங் கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. விற்பனை வழக்கம்போலவே இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கப் பெறலாம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சகோதரர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. முக்கிய முடிவுகள் எடுப்பதில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு எடுக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். ஆஞ்சநேயரை வழிபட புதிய முயற்சிகள் சாதகமாகும்,

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

மகர ராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க் கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல்நல னில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அம்பிகையை வழிபட அல்லல்கள் நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் செலவுகள் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

கும்பராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சியும் உற்சாகமும் தருவதாக இருக்கும். தாயின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

மீனராசி அன்பர்களே!

புதிய முயற்சிளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தரு வார். செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்கு சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும். இளைய சகோ தரரால் சங்கடங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக் கும். பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விநாயகரை வழிபட சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

Related Posts

மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!
ஆன்மீகம்

மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!

December 22, 2025
பரணி_தீபம் வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்?
ஆன்மீகம்

பரணி_தீபம் வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்?

December 2, 2025
இன்று பரணி தீபம் 2025.. வீட்டில் பரணி தீபம் ஏற்றும் முறையும், நல்ல நேரமும்..
ஆன்மீகம்

இன்று பரணி தீபம் 2025.. வீட்டில் பரணி தீபம் ஏற்றும் முறையும், நல்ல நேரமும்..

December 2, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி

அருட்சகோதரர் மீது தாக்குதல் – அதிகாரிகள் அறுவரும் பணிநீக்கம்

January 27, 2026
தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் – போராட்டத்தை நிறுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினால் பதற்றம்

January 27, 2026
புதிய முறையில் வரவுள்ள ஆசிரியரிகளின் இடமாற்றம்..!

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு

January 27, 2026
சமூக ஊடகங்களில் பரவும் கொழும்பு பிரபல பாடசாலை மாணவ தலைவன் – ஆசிரியைகள் வீடியோ Call சர்ச்சை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் பணிப்பு

சமூக ஊடகங்களில் பரவும் கொழும்பு பிரபல பாடசாலை மாணவ தலைவன் – ஆசிரியைகள் வீடியோ Call சர்ச்சை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் பணிப்பு

January 27, 2026

Recent News

இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி

அருட்சகோதரர் மீது தாக்குதல் – அதிகாரிகள் அறுவரும் பணிநீக்கம்

January 27, 2026
தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் – போராட்டத்தை நிறுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினால் பதற்றம்

January 27, 2026
புதிய முறையில் வரவுள்ள ஆசிரியரிகளின் இடமாற்றம்..!

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு

January 27, 2026
சமூக ஊடகங்களில் பரவும் கொழும்பு பிரபல பாடசாலை மாணவ தலைவன் – ஆசிரியைகள் வீடியோ Call சர்ச்சை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் பணிப்பு

சமூக ஊடகங்களில் பரவும் கொழும்பு பிரபல பாடசாலை மாணவ தலைவன் – ஆசிரியைகள் வீடியோ Call சர்ச்சை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் பணிப்பு

January 27, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version