ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்ட குழாமில் குசல் ஜனித் பெரேராவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தானையும் உள்ளடக்கி எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் B பிரிவில் இலங்கை அணி போட்டியிடவுள்ளது.
அதற்காக, தசுன் சானக்க தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் பரிந்துரைக்கப்பட்டு, தற்போது விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களின் பின்னர், குசல் ஜனித் பெரேரா இலங்கை ஒருநாள் அணி குழாமில் இணைக்கப்பட்டுள்ளதுடன், துனித் வெல்லாலகேவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
துஷ்மந்த சமீர, லஹிரு குமார மற்றும் மத்திஷ பத்திரன ஆகிய வேகப்பந்துபிவீச்சாளர்களும் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.
0️⃣1️⃣தசுன் ஷனக (C)
0️⃣2️⃣பாத்தும் நிஸ்ஸங்க
0️⃣3️⃣திமுத் கருணாரத்ன
0️⃣4️⃣குசல் ஜனித் பெரேரா
0️⃣5️⃣குசல் மெண்டிஸ்
0️⃣6️⃣சரித் அசலங்கா
0️⃣7️⃣சதீர சமரவிக்ரம
0️⃣8️⃣தனஞ்சய டி சில்வா
0️⃣9️⃣வனிந்து ஹசரங்க
1️⃣0️⃣துனித் வெல்லலகே
1️⃣1️⃣மகேஷ் தீக்ஷனா
1️⃣2️⃣லஹிரு குமார
1️⃣3️⃣துஷ்மந்த சமீர
1️⃣4️⃣தில்ஷான் மதுஷங்க
1️⃣5️⃣மதீஷ பத்திரன




Discussion about this post