Thursday, May 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home விளையாட்டு

Asia Cup 2023: ‘இந்திய அணி அறிவிப்பு?’.. 

by editor
August 11, 2023
in விளையாட்டு
0 0
A A
0
Asia Cup 2023: ‘இந்திய அணி அறிவிப்பு?’.. 
Share on FacebookShare on Twitter

ஆசியக் கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்குமுன், ஆசியக் கோப்பை ஏதாவது ஒரேயொரு நாட்டில்தான் நடைபெற்றிருக்கிறது. ஆனால், முதல்முறையாக ஆசியக் கோப்பை 2023 தொடரை பாகிஸ்தானும், இலங்கையும் சேர்ந்து நடத்தவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடைபெறும் எனவும் இதில், பாகிஸ்தானில் நான்கு போட்டிகளும், எஞ்சிய போட்டிகள் இலங்கையிலும் நடக்கும்.

6 அணிகள்:

6 அணிகள்:

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபால் ஆகிய மொத்தம் 6 அணிகள் இந்த ஆசியக் கோப்பை 2023 தொடருக்கு தகுதிபெற்றுள்ளது. இந்த 6 அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து விளையாடும். குரூப் ஏ பிரிவில் 3 அணிகளும், குரூப் பி பிரிவில் 3 அணிகளும் இருக்கும். இதில், இரு குழுவிலும் தலா முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். இந்த சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பைனலில் விளையாடும்.

இந்திய அணி இதுவரை 7 முறை ஆசியக் கோப்பையை வென்று சாதித்துள்ளது. தற்போது, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

குரூப் ஏ, குரூப் பி பிரிவுகள்:

குரூப் ஏ, குரூப் பி பிரிவுகள்:

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபால் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும் இருக்கிறது.

இந்திய அணி அறிவிப்பு:

இந்திய அணி அறிவிப்பு:

இந்நிலையில், ஆசியக் கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணி குறித்த முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் 15 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்த பட்டியலில் இருக்கும் சில வீரர்களை தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஷ்ரேயஸ், ராகுல், பும்ரா:

ஷ்ரேயஸ், ராகுல், பும்ரா:

இந்த ஆசியக் கோப்பை 2023 தொடருக்கான முதற்கட்ட இந்திய அணி பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஜஸ்பரீத் பும்ரா ஆகியோரின் பெயர்கள் இருக்கிறது. இதில், பும்ரா அயர்லாந்து தொடரில் இந்திய அணிக் கேப்டனாக செயல்பட உள்ளார். அப்போது, அவருக்கு ஏதாவது பிட்னஸ் பிரச்சினை இருந்தால், உடனே ஓய்வுக்கு அனுப்பப்படுவார். அதேபோல், கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இந்த ஆசியக் கோப்பையில் அதிரடி காட்டினால் மட்டும்தான், உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்க முடியும் என்பதால், இத்தொடர் இவர்களுக்கு மிகமுக்கியமானதாக இருக்கிறது.

15 பேர் பட்டியல்:

15 பேர் பட்டியல்:

இந்திய அணி (உத்தேசம்): ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், யுஜ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

Related Posts

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி இராஜினாமா!
இலங்கை

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி இராஜினாமா!

April 29, 2026
சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவருக்கு அபராதம்
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவருக்கு அபராதம்

April 12, 2026
இளைஞர்களுக்கான கிரிக்கெட் கனவு – மலிங்க தொடங்கிய திறன் மேம்பாட்டு திட்டம்
இலங்கை

இளைஞர்களுக்கான கிரிக்கெட் கனவு – மலிங்க தொடங்கிய திறன் மேம்பாட்டு திட்டம்

March 11, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version