கண்டியில் இருந்து மாத்தளை வரையான புகையிரத சேவைகள் அடுத்த வாரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு முதல் 21 ஆம் திகதி அதிகாலை 04.00 மணி வரை புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி மற்றும் கட்டுகஸ்தோட்டைக்கு இடையிலான புகையிரத தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.






Discussion about this post