ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று (25) மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவததாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
நாட்டின் மற்ற பகுதிகளில் சீரான வானிலை நிலவும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.’
கொழும்பிலிருந்துகாலி ஊடாகமாத்தறை வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழைபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.






Discussion about this post