2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நவம்பர் மாதம் நடைபெறும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பரீட்சைக்கு இதுவரை 3,23,913 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நவம்பரில் நடைபெறவுள்ள பரீட்சைக்கான காரணங்களை முன்வைத்த கல்வி அமைச்சு, ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் உரிய நேரத்தில் வினாத் தாள் திருத்துவதில் ஈடுபடத் தவறியமையே முன்னைய பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதத்திற்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.






Discussion about this post