கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெனிக்கும்புர அடிபார பகுதியில் இன்று (16) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மெனிக்கும்புர, அடிபார பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் மனைவி வெளிநாட்டில் இருப்பதால் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த தனியார் பாதுகாப்பு சேவையொன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தரே இக்கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பேராதனை, முருதலாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் எனவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்துடன் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






Discussion about this post