இந்தியா மற்றும் பங்களாதேஷிலிருந்து நேரடியாக மருந்துகளைக் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் இருநாட்டு சுகாதார அமைச்சர்களுடன் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கலந்துரையாடியுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது 277 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக நாடுகளுக்கு இடையில் மருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
விலைமனு கோருவதில் ஏற்படும் தேவையற்ற கால தாமதத்தை குறைக்கும் வகையில் இந்த புதிய முறை,
அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.






Discussion about this post