நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3244 ஆக உயர்ந்துள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் 596 குடும்பங்களை சேர்ந்த 2600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 151 குடும்பங்களை சேர்ந்த 594 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.






Discussion about this post