இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் கியூ.ஆர். முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் அமுல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (16) தெரிவித்தார்.
அரசாங்கம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் Q.R. முறைமையை மீளக் கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய இராணுவ நிலைமை காரணமாக, எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் என்று அரசாங்கம் ஊகித்து, எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த, அரசாங்கம் தேசிய எரிபொருள் உரிமம் அல்லது. சில சமூக ஊடகங்கள் Q.R இந்த அமைப்பை மீண்டும் கொண்டுவர தயாராகி வருவதாக பதிவிட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.






Discussion about this post