பொலிஸில் முறைப்பாடு செய்வதாக கூறியமையால் சிறுமி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவருக்கு மேலும் மூன்று இளம் சகோதரர்கள் உள்ள நிலையில் இவர்கள் அயல் வீட்டு சிறுவர்களுடன் விளையாடுவது வழக்கம்.
ஒரு நாள் சிறுவர்கள் வழக்கம் போல் விளையாடிக்கொண்டிருக்கும் போது சிறுவர்களிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து இரு வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இரு வீடுகளுக்கும் இடையில் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர் தாக்கப்பட்ட அயல் வீட்டு சிறுமியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்போவதாக சிறுமியின் தந்தையிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், பொலிஸ் முறைப்பாடு குறித்த அச்சத்தில் சிறுமி கடிதம் ஒன்றினுடாக தனது மரணத்திற்கு அயல் வீட்டார் தான் காரணம் என எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.






Discussion about this post