Wednesday, May 6, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, மற்றுமொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற நபர் கைது..!

by editor
November 1, 2023
in இலங்கை
0 0
A A
0
கடவுச்சீட்டு தொடர்பான அனைத்து கட்டணங்களும் அதிகரிப்பு !
Share on FacebookShare on Twitter

மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரை, குடிவரவு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (31) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், தனது ஐந்து வயது மகன் மற்றும் அவரது மனைவி என குறிப்பிடப்பட்ட காங்கேசன்துறையைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவருடன்,

இத்தாலி செல்வதற்காக நேற்றையதினம் மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 1.45 மணிக்கு அவர்கள் விமானத்தில் பயணிக்கவிருந்தனர்.

அவர்கள் குடியகல்வு சாளரத்தில் தமது பயண ஆவணங்களை வழங்கியபோது, அவர்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழத் தொடங்கின. அவர்கள் மூவரும் எல்லை ஆய்வுப பிரிவிடம் பரிந்துரைக்கப்பட்டனர்.

அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனைகள் மற்றும் முதற்கட்ட விசாரணைகளின்போது, இந்த சிறு குழந்தை, சந்தேக நபருடையது எனினும்,

இந்த பெண் அவர்களது குடும்பத்தின் மனைவியோ அல்லது தாயோ அல்ல என்றும், வேறு பெண் என்றும் தெரிய வந்தது.

இந்த நபர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்தபோது இத்தாலியில் உள்ள தனது மனைவியின் கடவுச் சீட்டை கொண்டு வந்து,

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு முத்திரையை போலியாக தயாரித்து வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த கடவுச்சீட்டை பயன்படுத்தி வேறொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த அவர், இதற்கு முன்னர் மனைவியின் கடவுச் சீட்டை பயன்படுத்தி மேலும் ஒரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

அதன்படி, குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினரால் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts

இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு
இலங்கை

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026
டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்
இலங்கை

டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்

May 1, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version