Thursday, August 6, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இந்தியா

ஜனாதிபதி மற்றும் இந்திய நிதி அமைச்சருக்கிடையில் சந்திப்பு

by editor
November 3, 2023
in இந்தியா, இலங்கை
0 0
A A
0
ஜனாதிபதி மற்றும் இந்திய நிதி அமைச்சருக்கிடையில் சந்திப்பு
Share on FacebookShare on Twitter

இந்தியா – இலங்கைக்கு இடையிலான பௌத்த தொடர்புகளைப் பலப்படுத்த
15 மில்லியன் அமெரிக்க டொலர் அன்பளிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (02) நடைபெற்றது.

இதன்போது, இந்தியா – இலங்கைக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியிலான பௌத்த தொடர்புகளைப் பலப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்வதற்கான இருதரப்பு ஆவணங்களும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அன்பளிப்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த தொடர்பைப் பலப்படுத்தும் முக்கிய அம்சமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பௌத்த விகாரைகளின் கட்டுமானம், புனரமைப்பு, கலாச்சார பரிமாற்றம் தொல்பொருள் ஒத்துழைப்பு, இரு நாடுகளும் அந்யோன்ய தாதுக்களைக் காட்சிப்படுத்தல், மத ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ளல் போன்ற விடயங்களுக்காக மேற்படி நிதி அன்பளிப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

குறித்த அன்பளிப்பை, இலங்கை பொருளாதாரத்தின் மாறிவரும் நிலைமையை கருத்திற்கொண்டு, இலங்கை ரூபாயிலிருந்து இந்திய ரூபா வரையிலான கையிருப்பு ரீதியான பரிமாற்றத்தை மேற்கொள்ள, இரு நாடுகளும் இணங்கியுள்ளதுடன், சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப அதனை மாற்றியமைக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த இணக்கப்பாட்டுக்கு அமைவான பரிமாற்றத்தின் மூலம் இராஜதந்திர ஆவணங்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமை இந்திய – இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இருநாடுகளுக்கும் இடையிலான இணக்கப்பாட்டுக்கு அமைவான இருதரப்பு ஒப்பந்தம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் முன்னிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் புத்தசாசன சமய, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன ஆகியோரால் பரிமாற்றிக்கொள்ளப்பட்டது.

இந்த அன்பளிப்பின் கீழ் நாடளாவிய பௌத்த விகாரைகளில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரிய சக்தி திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதோடு, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதன்போது கைசாத்திடப்பட்டது. அதனையடுத்து இருநாட்டு பிரதிநிதிகளும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

புத்தசாசன சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, நிதி அமைச்சு மற்றும திறைசேரியின் பொருளாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்டவர்களும், இந்திய இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு – பொதுமக்களுக்கு அவதானிப்பு அறிவிப்பு
இலங்கை

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு – பொதுமக்களுக்கு அவதானிப்பு அறிவிப்பு

August 5, 2026
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்
இலங்கை

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

July 18, 2026
சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்
இலங்கை

சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

July 18, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022
ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

October 4, 2023

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு – பொதுமக்களுக்கு அவதானிப்பு அறிவிப்பு

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு – பொதுமக்களுக்கு அவதானிப்பு அறிவிப்பு

August 5, 2026
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

July 18, 2026
சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

July 18, 2026
ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 17, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version