அரியானாவின் ஜிந்த் மாவட்டத்திலுள்ள அரச பாடசாலையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட 60 மாணவிகள் இது குறித்து மாநில மகளிர் ஆணைக்குழுவிடம் அளித்த முறைப்பாடினையடுத்தே குறித்த விடயம் அம்பலமாகியுள்ளது.
குறித்த புகாரில் ”அதிபர் மாணவிகளை அவரது அலுவலகத்துக்கு அழைத்து பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் எனவும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவிகளிடம் தேர்வில் தோல்வி அடைய செய்துவிடுவேன் என மிரட்டி வந்துள்ளார்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனவும் இது குறித்த விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Discussion about this post