இஸ்ரேல் மற்றும் காசா போர் வெடித்தது தொடக்கம் கடந்த மூன்று வாரங்களில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கா மற்றும் கூட்டணி படைகளை இலக்கு வைத்து குறைந்தது 46 தடவைகள் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதி தொடக்கம் அமெரிக்கா மற்றும் கூட்டணி படைகளை இலக்குவைத்து நடக்கும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.
இதில் ஈராக்கில் 24 தடவைகளும் சிரியாவில் 22 தடவைகளும் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதோடு ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் அல்லது இந்த இரண்டு தாக்குதல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 56 பேர் காயமடைந்திருப்பதாகவும் பென்டகன் குறிப்பிட்டுள்ளது.





Discussion about this post