வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் யானையொன்றை கொன்று, அதன் தலையை வெட்டி கிரிந்திஓய ஆற்றில் வீசப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானையின் தலை, தும்பிக்கையை வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசப்பட்டுள்ளமை தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
யானையின் உடலை துண்டு துண்டாக வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசியுள்ளதுடன், யானையின் தலை மாத்திரம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இதுவரை தமக்கு எந்த முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.






Discussion about this post