இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு முன்னதாக இந்திய விமானப் படையின் ‘சூா்ய கிரண்’ குழு வான் சாகச நிகழ்ச்சியை நடத்தவுள்ளது அதற்கான ஒத்திகை அகமதாபாத் மைதானத்தில் நேற்று(17) நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை(19) பிற்பகல் 2 மணிக்கு இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.
உலகக் கிண்ண போட்டி நிறைவடைவதையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளநிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்னா் இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





Discussion about this post