இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் வட மலுக்கு மாகாணத்தில் உள்ள மேற்கு டோபெலோ என்கிற பகுதியில் இருந்து 94 கி.மீ., தொலைவில் 116 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவாகியுள்ளது.
“சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லையெனவும் ஆனால் சாத்தியமான பின் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதெனவும் இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 331 பேர் உயிரிழந்ததுடன் கிட்டத்தட்ட 600 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.





Discussion about this post