இலங்கை கிரிக்கெட்டின் (SLC) முழு நேர கிரிக்கெட் ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெயசூரியவின் பங்கு இந்தத்துறையில், மூலோபாய திட்டமிடல், தொழில்நுட்ப அம்சங்கள், அத்துடன் பயிற்சி,
மற்றும் தேசிய அணியின் ஒட்டுமொத்த மேம்பாடு ஆகியவற்றில் அவரது நுண்ணறிவுகளை வழங்குவதை உள்ளடக்கியது.
எவ்வாறாயினும், இந்த யோசனைக்கு செயற்குழு உறுப்பினர்கள் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.




Discussion about this post