Sunday, June 21, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home சினிமா

ஐஸ்வர்யா ராய் மகளா இது ? ஆராத்யா செய்த விஷயம், நெகிழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் செய்த காரியம் !! நீங்களே பாருங்க…

by editor
December 16, 2023
in சினிமா
0 0
A A
0
ஐஸ்வர்யா ராய் மகளா இது ? ஆராத்யா செய்த விஷயம், நெகிழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் செய்த காரியம் !! நீங்களே பாருங்க…
Share on FacebookShare on Twitter

ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் பிரதானமாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். மிஸ் வேர்ல்ட், உலக அழகி என பியூட்டி பேஜண்ட்டுகளின் உயரிய பட்டங்களையும், இந்தியாவின் பெருமையான விருதான பத்மஸ்ரீ விருதையும் ஐஸ்வர்யா ராய் வென்றிருக்கிறார். தூம் படத்தில் நடித்தபோது அபிஷேக் பச்சனை காதலித்தார். கடந்த 2007ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

2011ல் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடிக்கு ஆராத்யா என்ற மகள் பிறந்தார். ஆராத்யா பச்சன் ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சனுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த பச்சன் குடும்பத்திற்கே மிகவும் செல்லமானவர். 12 வயதான ஆராத்யா பச்சன் திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார். படிப்பில் மிகவும் கெட்டிக்காரரான ஆராத்யா பச்சன் அவ்வப்போது அப்பா அபிஷேக், அம்மா ஐஸ்வர்யா, தாத்தா அமிதாப் என அவர்களோடு திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுவார்.

அம்மா ஐஸ்வர்யா ராய் போலவே ஆராத்யா பச்சன் மிக அழகாக இருப்பதால் இவரும் நடிக்க வந்து விடுவாரோ ? என்ற கேள்விகளும் அவ்வப்போது இணையத்தில் எழுந்து வந்தது. அந்த வகையில், ஆராத்யா கண்டிப்பாக நடிக்க வரவேண்டும் என கூறும் வகையில் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். படிப்பில் மிகவும் கெட்டிக்காரரான ஆராத்யா பச்சன் கபடி போன்ற விளையாட்டிலும் அதிக ஆர்வமுடையவர்.

தற்போது ஆராத்யா பச்சன் அவரது பள்ளி ஆண்டு விழாவில் செய்த மேடை மிகழ்ச்சியின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. கருப்பு நிற உடையில், ஆங்கில வரிகளை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் பேசிய ஆராத்யா பச்சனின் நடிப்பு வீடியோ இப்போது பாலிவுட் வட்டாரங்கள் மட்டுமல்லாது கோலிவுட் வட்டாரங்களிலும் பரவத் தொடங்கி இருக்கிறது.

எப்போதுமே முடியை முன் விட்டிருக்கும் ஆராத்யா இந்த நடிப்பு காட்சியில் முழு முகத்தையும் காட்டும் வகையில் நடித்திருப்பார். இதுதான் ஆராத்யாவின் முழு முகமா என கேட்டுவருகிறார்கள் ரசிகர்கள். அதுமட்டுமில்லாது, நடிப்பில் அம்மா ஐஸ்வர்யா ராயையே மிஞ்சிவிடுவார்போல என கமெண்ட் போட்டுவருகிறார்கள் ரசிகர்கள்.

ஆராத்யாவின் இந்த வீடியோவில் ஐஸ்வர்யா செய்த நெகிழ்ச்சியான விஷயமும் பதிவாகியுள்ளது. ஆராத்யாவின் நடிப்பை பார்த்து நெகிழ்ந்த ஐஸ்வர்யா அவரது மொபைல் போனில் வீடியோ எடுத்தப்படி இருக்கிறார். ஆராத்யாவின் நிகழ்ச்சியை பார்க்க அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஸ்வேதா பச்சன் என ஒட்டுமொத்த பச்சன் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல், இந்தப் பள்ளியின் ஆண்டவிழாவில் முன்னணி பாலிவுட் நடிகர்களான கரன் ஜோகர், கரீனா கபூர், ஷாருக்கான் போன்றோர் வந்திருந்தார்கள். அவர்களது பிள்ளைகள் அதே பள்ளியில் படிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

குடும்பத்துக்கு விஜய் கடன்
இந்தியா

குடும்பத்துக்கு விஜய் கடன்

March 31, 2026
விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?
இந்தியா

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?

February 28, 2026
இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!
உலகம்

இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

January 4, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022
ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

October 4, 2023

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு?

June 5, 2026
கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

புத்தளத்தில் கொடூர விபத்து: தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு!

June 5, 2026
2ஆவது ஆர்ப்பாட்டக்காரருக்கும் ஈரானில் தூக்கு

ஈரான் போர் – அமெரிக்க சபையில் முக்கிய தீர்மானம்

June 5, 2026
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

June 5, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version