முட்டை புரதச்சத்து நிறைந்த ஓர் உணவு என்பது நமக்குத் தெரியும். ஆறு மாத குழந்தைகளுக்குக் கூட முட்டையை சாப்பிட கொடுக்கலாம். அந்த அளவுக்கு ஆரோக்கியம் நிறைந்தது. ஆனால் முட்டையில் உள்ள வெள்ளைக்கரு மட்டும் தான் புரதங்களால் ஆனது. மஞ்சள் கரு முழுக்க கொழுப்புச்சத்து. அதை சாப்பிடக் கூடாது என பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அத்தகைய முட்டையின் மஞ்சள் கரு பற்றிய சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
முட்டையின் வெள்ளைக்கருவை காட்டிலும் மஞ்சளில் புரதச்சத்து கொஞ்சம் தான் குறைவு. ஆனால் மஞ்சள் கருவில் கொழுப்புச்சத்தும் இருக்கிறது. அதனாலேயே அதை சாப்பிடுவதை தவிர்க்கலாமா, அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டாமா…
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டையில், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் மட்டும் 25 கலோரிகள் இருக்கின்றன. ஆனால் மஞ்சள் கருவில் ஒரு கலோரி அளவு மட்டும் தான் அதிகம். ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 26 கலோரிகள் இருக்கின்றன.
முட்டையின் மஞ்சள் கருவில் கார்போஹைட்ரேட் சுத்தமாகக் கிடையாது. இதில் புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் மட்டுமே இருக்கின்றன.
ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 1.2 கிராம் அளவுக்கு நம்மால் புரதத்தை பெற முடியும். அதிலுள்ள உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் எல்டிஎல் கொலஸ்டிரால் இரண்டும் சேர்த்து 2.2 கிராம். அதில் எல்டிஎல் கொலஸடிராலின் அளவு வெறும் 94 மில்லிகிராம். இரும்புச்சத்து 0.4 மில்லி கிராம் அளவு இருக்கிறது.
மஞ்சள் கருவுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் தன்மை இருக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்திருக்கின்றன. அதோடு ஆன்டி – ஆக்சிடண்ட்டுகளும் அதிகமாக இருக்கின்றன.
குறிப்பாக இதிலுள்ள லூடின் என்னும் ஆன்டி – ஆக்சிடண்ட் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
முட்டையின் மஞ்சள் கருவில் அமினோ அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன. டிரிப்டோபன் மற்றும் டைரோசின் ஆகிய இரண்டு அமினோ அமிலங்களும் மிக முக்கியமானவை.
இந்த இரண்டு மூலக்கூறுகளும் உடலில் உள்ள பல்வேறு வகையான பயோ-கெமிக்கல்கள் மூலக்கூறுகளை சிதையாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது.
முட்டையின் மஞ்சள் கருவில் மிகக் குறைந்த அளவு தான் கொலஸ்டிரால் இருக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவில் சால்மோனெல்லா என்னும் பாக்டீரியாவின் தாக்கம் அதிகம் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த சில பாக்டீரியாக்களால் ஏற்படும் விளைவால் சரியாக முட்டை வேகவைக்கப்படாமல் இருக்கும் போது ஃபுட் பாய்சன் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
உயர் ரத்த அழுத்தம், உயர் கொலஸ்டிரால், நீரிழிவு போன்ற எந்த உடல்நலக் கோளாறும் இருப்பவர்கள் ஒரு முட்டையின் மஞ்சள் மட்டும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடலாம். மேற்கண்ட .இந்த பிரச்சினை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று முட்டையின் மஞ்சள் கரு வரைக்கும் எடுத்துக் கொள்ளலாம்.
Discussion about this post