கட்டுரை தகவல்
எழுதியவர்,ஜெய்தீப் வசந்த்
பதவி,பிபிசி குஜராத்தி
(பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா பிப்ரவரி 27 அன்று பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதையொட்டி இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது)
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய உத்தரவுக்குப் பிறகு, டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் பேடிஎம்-மின் (PayTM) எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை பேடிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான ஒன் 97 (One97) கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை பின்னுக்குத் தள்ளியது.
உத்தர பிரதேசத்தின் அலிகரில் ஆங்கிலம் பேசத் தயங்கும் இளைஞராக இருந்து, பேடிஎம்-ஐ உருவாக்கி நாட்டின் இளம் கோடீஸ்வரர் எனும் இடத்திற்கு பயணித்த விஜய் சேகர் சர்மாவின் கதை இது.
பிரதமர் நரேந்திர மோதி அரசு எடுத்த முடிவால் அந்நிறுவனத்துக்கு அசாதாரண லாபம் கிடைத்த நிலையில், தற்போதைய நெருக்கடி எதனால் ஏற்பட்டது?
அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் பிரகாஷ் மற்றும் ஆஷா சர்மா ஆகியோருக்கு 1978-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி பிறந்தார் விஜய் சேகர். அவர் தனது ஆரம்பக் கல்வியை ஹர்துவாகஞ்சில் பயின்றார். அவரது தந்தை ஒரு கண்டிப்பான பள்ளி ஆசிரியர்.
அவர் சராசரியான வசதிகள் உள்ள பள்ளிகளில் படித்தார். அப்பள்ளியில் படித்த சில மாணவர்களுக்கு அணிய செருப்பு கூட இல்லை. ஆனாலும் சர்மா கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார். எப்போதும் படிப்பிலேயே கவனம் செலுத்தினார்.
அவருடைய பெற்றோர் தங்கள் இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்களை ஆசிரியர் வேலையில் வரும் வருமானத்தில் இருந்து வளர்த்து வந்தனர். குடும்பத்தில் திருமணம் நடந்தாலும் பள்ளி சீருடை அணிய வேண்டும்.
மகளின் திருமணத்தின் போது வாங்கிய 2 லட்ச ரூபாய் கடனால் குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமானது. விஜய் சேகர் சர்மா உணவுக்கான பணத்தை சேமிக்க தினமும் எட்டு முதல் 10 கிலோமீட்டர் வரை நடக்க வேண்டியிருந்தது.
வெறும் 14 வயதில், அவர் உயர்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இருப்பினும், பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 15 என்பதால், கல்லூரி சேர்க்கைக்கு அவர் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருந்தது. பல அரசுப் பல்கலைக்கழகங்களில் முயற்சி செய்தும் வெற்றி பெறாமல், கூட்டு நுழைவுத் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார்.
பல்வேறு பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள் மற்றும் துணைவேந்தர்களிடம் பேசியபோது, உயர் படிப்புக்கு ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை விஜய் சேகர் உணர்ந்தார். குறைந்த வருமானமும் வேறு எந்த ஆதாரமும் இல்லாத சிறிய நகரத்திலிருந்து வந்த அவர், ஆங்கிலம் ஆங்கிலம் மற்றும் இந்தி புத்தகங்களை கொண்டு வந்து படிப்பார். வறுமையின் பிடியில் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் மீட்டெடுக்க விரும்பினார்.
வினீத் பன்சால் சர்மா பேடிஎம்-ஐ மையமாகக் கொண்ட ‘ஃபேஸ் ஆஃப் இந்தியன் ஸ்டார்ட் அப் இன்டஸ்ட்ரி விஜய் சேகர் சர்மா’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
பள்ளிகளில் மட்டும் விஜய் சேகர் சர்மா பிரச்னைகளை சந்திக்கவில்லை. டெல்லியிலும் அவரது பிரச்னைகள் வளர்ந்ததே தவிர குறையவில்லை. பன்சால் தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
1994-ம் ஆண்டு டெல்லி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பிரிவில் படிக்க விஜய் சேகர் அனுமதி பெற்றார். 16 வயதை பூர்த்தி செய்யாவிட்டாலும் டெல்லி பல்கலைக்கழகம் அவருக்கு அனுமதி அளித்தது.
விஜய் சேகர் கல்லூரியில் நுழைய முடிந்தது. ஆனால் அவர் இரண்டு தடைகளை எதிர்கொண்டார். ஒன்று, அவர் மற்ற மாணவர்களை விட இளையவர். மற்றொன்று டெல்லியைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்களின் பேச்சு மொழி ஆங்கிலம். ஆனால், விஜய் சேகர் இந்தியை சரளமாக பேசுபவர்.
சக மாணவர்களுடன் பழக முடியாமல், படிப்பதிலும், புத்தகங்களுடனே நேரத்தை செலவிடுவதிலும் அதிக ஆர்வம் காட்டினார் அவர். நல்ல நிலையில் உள்ள சிறந்த ஆங்கிலப் புத்தகங்கள் டெல்லியில் உள்ள தர்யாகஞ்ச் மற்றும் ஆசிப் அலி சாலையில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதை அவர் உணர்ந்தபோது, அவருடைய கல்வி வாழ்க்கையில் மேலும் செலவு அதிகரித்தது குறியீட்டு முறையையும் (Coding) அவர் கற்றுக்கொண்டார்.
மாணவராக இருந்தபோதே, ஒரு தனியார் விமான நிறுவனத்தின் டெல்லி-மும்பை அட்டவணைக்கான வலை-நிரலை (Web-program) எழுதினார். இதற்காக அவருக்கு ரூ. 1,000 வருமானம் கிடைத்தது. முறையான கல்விச் சான்றிதழின்றி கூட தன்னால் சம்பாதிக்க முடியும் என்று அப்போது சர்மா உணர்ந்தார்.
அப்போது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த சபீர் பாட்டியா, தனது மின்னஞ்சல் நிறுவனமான ‘ஹாட்மெயில்’ நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 400 மில்லியன் டாலர்களுக்கு விற்றார். இந்தியாவின் இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் சபீர் பாட்டியா தனி இடத்தைப் பிடித்தார். நிதி நிலைமை காரணமாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தன்னால் படிக்க முடியாது என்பதை விஜய் சேகர் அறிந்திருந்தார்.
இருப்பினும், இணையம் மற்றும் ஸ்டார்ட் அப்களின் முக்கியத்துவத்தை அவர் புரிந்துகொண்டார். கல்லூரிக் காலத்தில், தன் நண்பருடன் இணைந்து இணையம் தொடர்பான ஸ்டார்ட்-அப் ஒன்றை தொடங்கினர். விசிட்டிங் கார்டில் ஹாஸ்டல் அறை எண்ணை அவர்கள் கொடுத்திருந்தனர்.
பேஜர் மட்டுமே இருந்த அந்த காலத்தில் அவர் ஒரு கடைக்காரரை நண்பராக்கிக் கொண்டார். கொஞ்சம் பணத்திற்கு தன்னுடைய எண்ணை விசிட்டிங் கார்டில் எழுதிக்கொள்ள விஜய் சர்மாவை அனுமதித்தார் அந்த கடைக்காரர்.
பேடிஎம் சர்ச்சைபட மூலாதாரம்,
One97 தகவல்தொடர்புகளை நிறுவுதல்
தொழில்நுட்ப நிருபரும் எழுத்தாளருமான விஜய் மேனன், ‘இன்னவேஷன் ஸ்டோரிஸ் இன் இந்தியா இங்க்’ (Innovation Stories in India Inc) என்ற புத்தகத்தில், டாடா, எல்&டி, காத்ரேஜ், ஏசியன் பெயின்ட்ஸ், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உட்பட நாட்டில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் புதுமையான சோதனைகள் அல்லது ஆராயப்படாத துறைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். பேடிஎம் பற்றி ஒரு அத்தியாயமும் உள்ளது. புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
”கல்லூரியின் போது, விஜய் சேகர் இந்தியாவின் சுற்றுலாத் துறையில் ஒரு இணையதளத்தை உருவாக்கினார். பின்னர், டெல்லியைச் சேர்ந்த ஒரு ஊடக நிறுவனம் இந்த இணையதளத்தை வாங்கியது. அப்போது விஜய் சேகர் சர்மாவுக்கு ஓரளவு பணமும் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பதவியும் கிடைத்தது. இதற்கு முன், தனியார் நிறுவனத்தில் ஓராண்டுக்கு மேல் பணியாற்றினார். அப்போது பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் அவர்களுடைய பொருளாதார கவலைகள் இதனால் ஓரளவு தளர்ந்தன.
ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் ஊடக நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவு தலைவராகப் பணிபுரிந்து, இரண்டு வருடங்கள் கழித்து, மீண்டும் துணிகர முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை அவருக்கு வலுத்தது. அவர் One97 எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். நிறுவனம் டெல்லியில் பதிவு செய்யப்பட்டது, ஆனால் அதன் ஊழியர்கள் நொய்டாவில் இருந்தனர்.
எஸ்எம்எஸ் சகாப்தத்தில், அவருடைய நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நகைச்சுவைகள், செய்திகள், கிரிக்கெட் புதுப்பிப்புகள், ஜோதிடம் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கியது. நாட்டில் தொலைத்தொடர்பு துறை வளர்ந்து வந்த நிலையில், அவருடைய நிறுவனமும் இணைந்து வளர்ந்து வந்தது.
2007-ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2ஜி அலைக்கற்றையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியது. ஓரிரு ஆண்டுகளுக்குள், நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கு கடும் போட்டியில் ஈடுபட்டன. இதனால், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் பிரச்னை எழுந்தது.
2009-ம் ஆண்டில், சர்மா மொபைல் பேலன்ஸ் டாப்-அப் வழங்கும் ‘Paytm’-ஐ அறிமுகப்படுத்தினார். இது தவிர, வாடிக்கையாளர் தனது வங்கிக் கணக்கு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கவும் செய்யலாம். Paytm இன் பங்குச் சந்தை தொகுப்பு (பக்கம் எண். 2018) வேறு சில வருடாந்திர விவரங்களை நமக்கு அளிக்கிறது. அதன்படி:
பேடிஎம் 2013-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெற்றது. அடுத்தாண்டு பேடிஎம் அதன் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தியது.
ரூ. 100-200 சிறிய நிதி பரிவர்த்தனைகளுக்கு மொபைல்களைப் பயன்படுத்த டெலிகாம் ஆபரேட்டர்களோ அல்லது வங்கி நிறுவனங்களோ ஆர்வம் காட்டவில்லை என்பதை விஜய் சேகர் கவனித்தார். இந்த இடத்தை வாலட் உரிமங்கள் மற்றும் செயலிகள் மூலம் அவரால் நிரப்ப முடிந்தது.
2014-ம் ஆண்டுக்குப் பிறகு, நாட்டில் 4-ஜி நாணயம் அதிகரிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோவை அறிமுகப்படுத்தியதன் காரணமாக தொலைத்தொடர்பு துறை அசாதாரன வளர்ச்சி அடைந்தது. மின்னஞ்சல், தகவல்களை அனுப்புவதற்கான செயலிகள் மற்றும் சமூக ஊடக பயன்பாடுகளை எளிதாக அணுகுவதற்கு ஸ்மார்ட்போன்கள் மக்களின் கைகளுக்கு வந்தன. இதனுடன் மொபைல் வாலட் பயன்பாடும் அதிகரித்து வந்தது.
பேமெண்ட்ஸ் பேங்க் (2017), சாலை சுங்கவரி சேகரிப்புக்கான FASTag (2017), ஸ்டாக் புரோக்கர் (2019), ஆயுள் மற்றும் பொது காப்பீட்டு புரோக்கர் (2020) ஆகியவை உருவாகின.
2020-ம் ஆண்டில் பேடிஎம் செயலியை கூகுள் அதன் பிளேஸ்டோரிலிருந்து அகற்றியபோது, பேடிஎம் சூதாட்ட விதிகளை மீறுவதாகக் குறிப்பிட்டது. அதேநேரத்தில் கூகுளின் ஏகபோக உரிமையை பேடிஎம் நிறுவனம் கேள்விக்குட்படுத்தியது. அதே ஆண்டில், பிளே ஸ்டோருக்கு போட்டியாக இந்திய ஸ்டார்ட்-அப்களில் இருந்து பேடிஎம் மினி-ஆப் ஸ்டோரை விஜய் சேகர் தொடங்கினார்.
இருப்பினும், இவை அனைத்திற்கும் மத்தியில் நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒரு நிகழ்வு நடந்தது. அதை பேடிஎம் நிறுவனம் தன் அதிகாரபூர்வ ஆவணங்களில் குறிப்பிடவில்லை. ஆனால் இது பேடிஎம் அசாதாரண விகிதத்தில் வளர பெரிதும் பயனடைந்தது.
பேடிஎம் சர்ச்சைபட மூலாதாரம்,
மோதி அரசின் நடவடிக்கை
பண பரிவர்த்தனைகளை பேடிஎம் உடன் இணைக்க விரும்பினார் விஜய் சேகர். அவரது கனவை மத்திய அரசின் நடவடிக்கை நனவாக்கியது.
நவம்பர் 8, 2016 அன்று மாலை, ‘நமோ’ எனப்படும் பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கம் ரூ. 500 மற்றும் ரூ. 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இது பண மதிப்பிழப்பு அல்லது ஆங்கிலத்தில் ‘டெமோ’ (demo) என்று அறியப்பட்டது.
நாட்டில் இருந்த 85 சதவீதத்துக்கும் அதிகமான ரூபாய் நோட்டுகள் ஒரே இரவில் திரும்பப் பெறப்பட்டன. இந்த செயல்முறை இரண்டு மாதங்கள் நீடித்தது. மேலும் அதன் விளைவுகள் பல மாதங்கள் நீடித்தன. இதனால், பெரும்பாலும் பண பரிவர்த்தனையில் இயங்கும் நாட்டின் பொருளாதாரத்தில், மக்கள் கிரெடிட் கார்டுகள், இணைய வங்கி சேவை, இணைய ஷாப்பிங் போன்ற மாற்று வழிகளை முயற்சித்தனர்.
இருப்பினும், சிறிய நிதி பரிவர்த்தனைகளுக்கு மிகவும் வெற்றிகரமான மற்றும் பிரபலமான விருப்பம் இ-வாலட் பரிவர்த்தனைகள் ஆகும். Freecharge, Mobiquik போன்ற பல இ-வாலட்கள் இருந்தாலும், பேடிஎம் தான் இதில் வெற்றியாளர்.
பேடிஎம் பிரதமர் நரேந்திர மோதியின் படங்களுடன் நாடு முழுவதும் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டு நன்றி தெரிவித்தது. ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்காக பிரதமர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு மூன்று மாதங்களில் பேடிஎம் பயனர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்தது. பேடிஎம் சங்கிலியில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவைச் சேர்ந்த சுமார் 19 கோடி கணக்குகள் இணைந்தன. ஆங்கிலம் தவிர, செயலியின் பயன்பாட்டு மொழியாக இந்தி மற்றும் நாட்டின் பிராந்திய மொழிகளும் உள்ளன. இதனால், குறைந்த கல்வியறிவு அல்லது ஆங்கிலம் தெரியாதவர்களும் அதனை எளிதாக பயன்படுத்த முடிந்தது.
2015-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வருமானம் ரூ. 336 கோடியாக இருந்தது. இது மார்ச்-2017ல் 828.6 கோடியாக அதிகரித்தது. 30 கோடி பயனர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 7 மில்லியன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர். இதன் மதிப்பு 9.4 பில்லியன் டாலர்கள்.
இந்த அசாதாரண வளர்ச்சிக்குத் தேவையான பணியாளர்களை பணியமர்த்துதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அதிக நிதி தேவைப்பட்டது. டிசம்பர் 2016-ல், ஜப்பானின் புகழ்பெற்ற Softbank மற்றும் சீன கோடீஸ்வரர் ஜாக் மாவின் நிறுவனமான Ant Financial-ன் முதலீட்டுக்குப் பிறகு பேடிஎம்-இன் மதிப்பீடு 4.86 பில்லியன் டாலர்களை எட்டியது.
நிறுவனத்தில் அவருக்கு இருந்த பங்கு, சர்மாவை தனிப்பட்ட முறையில் 38 வயதில் நாட்டின் மிக இளைய தொழில்முனைவோராக மாற்றியது. அப்போது அவரது சொத்து மதிப்பு ஒரு பில்லியன் 30 கோடி டாலர்கள். அவரது ஒரு சதவீத பங்குகளை விற்றதன் மூலம், சர்மா அவரை பேடிஎம்-இன் பேமெண்ட்ஸ் வங்கியில் தனிப்பட்ட பங்குதாரராகத் தக்க வைத்துக் கொண்டார்.
அதன் பிறகு விஜய் சேகரின் சகோதரரும் பேடிஎம்-ன் துணைத் தலைவருமான அஜய் சேகர் சர்மாவின் ரகசிய வீடியோ வெளியானது. அதில் அவர் பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்.எஸ்.எஸ்) நெருக்கமானவர் என்றும் இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் கல் வீச்சு நடத்தியவர்கள் பற்றிய தகவல்களை பிரதமர் அலுவலகத்திற்கு வழங்கியதாகவும் கூறினார்.
இதுதவிர, பேடிஎம் தனது செயலி மற்றும் இணையத்தில் பிரதமருக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் அஜய் சேகர் கூறினார். அவரது தாக்குதலுக்குப் பிறகு, பேடிஎம் பயனர்களின் தரவுகளின் தனியுரிமை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
பேடிஎம் சர்ச்சைபட மூலாதாரம்,
பொதுக்கடன்
பேடிஎம் நிறுவனம் ஷாப்பிங், பேருந்து, ரயில், விமானம் மற்றும் சினிமா டிக்கெட்டுகளுக்கான சேவைகளை வழங்குகிறது; மேலும், எரிவாயு, மின்சாரம், தண்ணீர், மொபைல், கிரெடிட் கார்டு, தொலைபேசி மற்றும் இணைய கட்டணம் செலுத்துதல்; டிடிஹெச் மற்றும் மொபைல் ரீசார்ஜ், ஃபாஸ்டாக் போன்ற சேவைகளை வழங்குவதன் மூலம் பல சேவைகளுக்கான ஒரே இடமாக பேடிஎம்-ஐ மாற்ற முயற்சிகள் நடந்தன. இதுதவிர, மியூச்சுவல் ஃபண்ட், டிஜிட்டல் தங்கம், பொது மற்றும் ஆயுள் காப்பீடு; தனிநபர், வணிகம், வீடு மற்றும் கார் கடன்களும் பேடிஎம் மூலம் கிடைக்கின்றன.
ஒரு கட்டத்தில், நிறுவனத்தின் இ-காமர்ஸ் தளத்தைத் தவிர, 40 கோடி பயனர்கள் தினமும் இரண்டரை கோடி நிதிப் பரிவர்த்தனைகளைச் செய்து வந்தனர். எந்தவொரு நிறுவனத்திலும் நடப்பது போல், இப்போது ஆரம்ப முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளில் சிலவற்றை விற்க விரும்பினர், இதற்காக பிரபலமான ஐபிஓ (இனிஷியல் பப்ளிக் ஆஃபர்) அல்லது பொது வழங்கல் எடுக்கப்பட்டது.
லாபம் கிடைப்பதற்கு உறுதி இல்லை என்பதால், நிபுணர்கள் அந்த பங்குகளை தவிர்க்குமாறு மதிப்பீடுகளை வழங்கினர். இருப்பினும், மக்கள் பொதுப் பதிவுக்கு விண்ணப்பித்தனர். இதில், நிறுவனத்திற்கு ரூ. 18 ஆயிரத்து 300 கோடி திரட்டப்பட்டது.
ரூ. 2,150 விலையில் ஒதுக்கப்பட்ட பங்குகள் முதல் நாளில் ஒன்பதில் இருந்து 27 சதவீதம் வரை சரிந்தது. பட்டியலிடப்பட்ட ஒரே நாளில், நிறுவனத்தின் சந்தை மூலதனம் 39 ஆயிரம் கோடி சரிந்தது.
அமெரிக்க புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட்டின் நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வேயும் விஜய் சேகரின் நிறுவனத்தில் முதலீடு செய்தார். ஐபிஓவின் போது, சீனா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் தங்கள் பங்குகளை பொது வழங்கலுக்கு விநியோகித்தனர். ஆனால், மார்ச்-2023 ரிசர்வ் வங்கி உத்தரவைத் தொடர்ந்து சில மாதங்களில் அவர்கள் தங்கள் பங்குகளை விற்றதாக கூறப்படுகிறது.
2013-ம் ஆண்டில், விஜய் சேகர் சர்மா நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு முதலீட்டாளர்களை அணுகினார். அந்த நேரத்தில், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அவருடைய நிறுவனத்தில் ஆர்வம் காட்டியது. அந்நிறுவனத்தின் பிரதிநிதியாக அஷ்னீர் குரோவர் இருந்தார். அவர் பாரத்-பே என்ற மொபைல் வாலட் நிறுவனத்தைத் தொடங்கியவர்.
விஜய் சேகரின் நிறுவனம் பட்டியலிடப்பட்ட நேரத்தில், சீன முதலீட்டாளர்களின் பணம் இந்திய முதலீட்டாளர்களின் இழப்பில் வெளியிடப்பட்டது என்று குரோவர் கருத்து தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி உத்தரவுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகும் பேடிஎம் பயன்பாடு தொடர்ந்து இயங்கும் என்று விஜய் சேகர் கூறியுள்ளார். அவர் உறுதியளித்த போதிலும், பேடிஎம்-இன் விலை பங்குச் சந்தைகளில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. அது எப்போது, எப்படி நிறுத்தப்படும் என்பதற்கான உறுதியான அறிகுறி எதுவும் இல்லை.
இந்த நெருக்கடிகளில் இருந்து வெளியேறினாலும், அமெரிக்க நிறுவனமான , அமேசானின் கட்டணச் செயலியான ஆல்பாபெட், வாட்ஸ்அப்பின் நிதி பரிவர்த்தனை தளமான மெட்டா, வால்மார்ட்-ன் ஃபோன்பே ஆகியவற்றுக்கிடையே தப்பிப்பிழைப்பது சவாலான ஒன்றாக உள்ளது.
Discussion about this post