Wednesday, February 4, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home அறிவியல்

சங்கடத்தை உண்டாக்கும் வியர்வை துர்நாற்றம்… என்ன செய்தால் நீங்கும்..?

by Editor
April 8, 2024
in அறிவியல்
0 0
A A
0
சங்கடத்தை உண்டாக்கும் வியர்வை துர்நாற்றம்… என்ன செய்தால் நீங்கும்..?
Share on FacebookShare on Twitter

வியர்வை பெரும்பாலானோருக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. கோடை காலத்தில் குளித்தாலும் வியர்வை சுரப்பு அதிகம் இருப்பதால் ஒரு வித துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இந்த நாற்றம் உடலில் சுரக்கும் ஒரு வித சுரப்பிகளில் இருந்து வெளிப்படுகிறது. உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் இணைந்து கடுமையான நாற்றத்தை உண்டாக்குகிறது. காற்று உட்புகாத ஈரப்பதமான உறுப்புகள் வியர்வையால் மேலும் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. அதாவது அக்குள் பகுதியில் அதிக வியர்வை சுரக்கும். அதிகப்படியாக வியர்த்தல் மிகவும் சங்கடமாக மாறும், ஆனால் அது தவிர்க்க முடியாதது. இதனை எளிதான வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்யலாம், அவை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

தக்காளி : தக்காளி வியர்வை துர்நாற்றத்தை அகற்ற உதவுகிறது. தக்காளி ஜூஸ் தினமும் அருந்தி வருவது மட்டுமின்றி அதனை அக்குள் பகுதிகளிலும் அப்ளை செய்யலாம். இதற்கு நன்றாக பழுத்த தக்காளியை மசித்து அக்குளில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதனை அடிக்கடி செய்து வந்தால் விரைவில் அக்குள் வியர்வை சரியாகும்.

கோதுமை புல் ஜூஸ் : கோதுமை புல் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு கப் கோதுமை புல் ஜூஸ் அருந்தி வந்தால் வியர்வை சுரப்பிகளை கட்டுக்குள் வைக்க முடியும். இது உடலில் உள்ள அமிலங்களை நடுநிலையாக்குவதற்கு உதவுகிறது. கோதுமை புல்லில் வைட்டமின் பி6, புரதம், வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், மற்றும் வைட்டமின் பி 12 சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே கோதுமை புல் ஜூஸ் தினமும் அருந்துங்கள்.

பேக்கிங் சோடா : பேக்கிங் சோடா வியர்வையை உறிஞ்சும் தன்மை பெற்றது. 1/2 கப் சோள மாவு, 1/2 கப் சமையல் சோடா மற்றும் அத்தியாவசிய எண்ணெய் சில துளிகளை எடுத்து நன்கு கலக்கி கொள்ளுங்கள். இந்த கலவையை அக்குள் பகுதியில் தடவி உலரவிட்டு கழுவவும். அக்குள்களை சுத்தம் செய்ய இந்த முறை உதவும்.

தயிர் மற்றும் மஞ்சள் தூள் : மஞ்சள் தூள் ஒரு சிறந்த கிருமி நாசினி, இதனுடன் தயிர் கலந்து பயன்படுத்தும் போது வியர்வை சுரப்பியில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வாடையைக் குறைக்கும். தினமும் குளிப்பதற்கு முன்பு கெட்டித்தயிருடன், மஞ்சள் தூள், ஜவ்வாது கலந்து நன்றாக குழைத்து அக்குளில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இப்படி செய்து வந்தால் துர்நாற்றம் மறையும்.

பாசிப்பருப்பு, கடலை மாவு : அக்குளில் கடலை மாவு, பாசிப்பருப்பு மாவை தேய்த்து குளித்துவரவும். வாரம் இரண்டு முறை இதனை செய்து வந்தால் விரைவில் வாடை மறையும்.

வேப்பிலை : வேப்பிலை வியர்வை துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமின்றி, கிருமிகளை அழிக்கவும் பயன்படுத்துகிறது. வேப்பிலையுடன், மஞ்சள் தூள் கலந்தும் பயன்படுத்தலாம்.

தளர்வான உடைகளை அணியுங்கள் : தளர்வான, பொருத்தமான வசதியான ஆடைகள் வியர்வையை தடுக்க உதவுகின்றன. இறுக்கமான ஆடைகளை அணிவது உங்கள் அக்குள் பகுதிகளில் அதிக வியர்வை சுரப்பை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, தளர்வான துணிகளை அணிய முயற்சிக்கவும். மேலும் அவை உங்கள் துணிகளில் வியர்வை மற்றும் கறை படிவதைத் தடுக்க உதவும்.

வியர்வையைத் தூண்டும் உணவுகளை தவிர்க்கவும் : நீங்கள் சாப்பிடும் உணவுகளும் அதிக வியர்வை சுரப்புக்கு காரணம் என்பது உங்களுக்குத் தெரியுமா? வியர்வை அக்குள்களைத் தூண்டக்கூடிய சில உணவுகள் மற்றும் பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் தவிர்த்தால் வியர்வை சுரப்பு குறையும். இதற்கு ஆல்கஹால், பூண்டு மற்றும் வெங்காயம், அதிக கொழுப்பு உணவுகள், சூடான மற்றும் காரமான உணவுகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.

Related Posts

மாணவர்களின் எதிர்காலமும் செயற்கை நுண்ணறிவும்
அறிவியல்

மாணவர்களின் எதிர்காலமும் செயற்கை நுண்ணறிவும்

January 13, 2026
ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதற்கு இந்த 5 தான் சீக்ரெட்
அறிவியல்

ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதற்கு இந்த 5 தான் சீக்ரெட்

January 13, 2026
ஆப்பிள் ஐபோன்களில் இனி கூகுளின் ‘Gemini’ AI
அறிவியல்

ஆப்பிள் ஐபோன்களில் இனி கூகுளின் ‘Gemini’ AI

January 13, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி

அருட்சகோதரர் மீது தாக்குதல் – அதிகாரிகள் அறுவரும் பணிநீக்கம்

January 27, 2026
தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் – போராட்டத்தை நிறுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினால் பதற்றம்

January 27, 2026
புதிய முறையில் வரவுள்ள ஆசிரியரிகளின் இடமாற்றம்..!

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு

January 27, 2026
சமூக ஊடகங்களில் பரவும் கொழும்பு பிரபல பாடசாலை மாணவ தலைவன் – ஆசிரியைகள் வீடியோ Call சர்ச்சை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் பணிப்பு

சமூக ஊடகங்களில் பரவும் கொழும்பு பிரபல பாடசாலை மாணவ தலைவன் – ஆசிரியைகள் வீடியோ Call சர்ச்சை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் பணிப்பு

January 27, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version