பிரமிடுகளை கிரானைட் கல் கொண்டு சீரமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது
எகிப்து பிரமிடுகளை சீரமைக்கும் அரசு; வலுக்கும் எதிர்ப்பு
எகிப்து அரசு பிரமிடுகளை கிரானைட் கல் கொண்டு சீரமைக்க திட்டமிட்டுள்ளது.
உலகின் தொன்மையான அதிசயங்களுள் ஒன்றான கிசாவில் உள்ள எகிப்திய பிரமிடுகள், இப்போது கடுமையான சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
பிரமிடுகளை சீரமைக்க இருப்பதாகவும் அதற்காக கிரானைட் கற்களை கொண்டு அவற்றின் அடித்தளத்தை புனரமைக்க இருப்பதாகவும் எகிப்து அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் பல வல்லுநர்கள் இத்திட்டத்தை சீரற்றது என்கின்றனர். மேலும் சமூக ஊடகங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த சர்ச்சைகள் காரணமாக, திட்டத்தை மறுஆய்வு செய்ய எகிப்து அரசாங்கம் நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளது.
கிசாவில் உள்ள மூன்று பிரமிடுகளில் மிகச் சிறியது மென்காரே பிரமிடு. இறந்தவர்களை புதைப்பதற்காக 4,500 ஆண்டுகளுக்கு முன்பு இது கட்டப்பட்டது.
இந்த வகையான திட்டங்கள் கடந்த காலங்களில் விமர்சிக்கப்பட்டாலும், எகிப்திய பொருளாதாரத்திற்கு சுற்றுலாத்துறை மிக முக்கியமானதாக இருக்கிறது.
bbc
Discussion about this post