1 மார்ச் 2024
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் துருக்கியும் மீண்டும் நேருக்கு நேர் மோதும் அளவுக்கு வந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 55ஆவது கூட்டத்தொடரில் துருக்கியும் பாகிஸ்தானும் காஷ்மீரில் மனித உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பி இந்தியாவை சுற்றி வளைத்தன.
ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது மிகவும் சாதாரணமாக நடக்கும் ஒன்று.
காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி இதற்கு முன்பும் இந்தியா மீது கேள்வி எழுப்பியிருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் முதன்மை செயலர் அனுபமா சிங், ’பதில் அளிக்கும் உரிமையின்’ கீழ், துருக்கிக்கும், பாகிஸ்தானுக்கும் பதிலளித்துள்ளார்.
“இந்தியாவின் உள்விவகாரம் குறித்து துருக்கி கருத்து தெரிவித்திருப்பதற்கு முதலில் வருந்துகிறோம். எதிர்காலத்தில் எங்கள் உள்விவகாரங்களில் தேவையற்ற கருத்துக்களை வெளியிடுவதை துருக்கி தவிர்க்கும் என நம்புகிறோம்,” என்று அனுபமா சிங் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து அனுபமா சிங் பாகிஸ்தானையும் சாடினார்.
Discussion about this post