Monday, March 23, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (Rasi Palan) – மார்ச் 20, 2024 புதன்

by Editor
March 20, 2024
in ஆன்மீகம்
0 0
A A
0
இன்றைய ராசிபலன் (Rasi Palan) – மார்ச் 20, 2024 புதன்
Share on FacebookShare on Twitter

இன்றைய ராசிபலன்களை (Today Rasipalan) துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடஶ்ரீ முருகப்ரியன். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் மட்டுமன்றி, 27 நட்சத்திரங்களுக்கும் அந்தந்த ராசிகளின் அடிப்படையில் பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

இன்றைய மேஷம் ராசிபலன் (Mesham Rasi Palan) – மார்ச் 20, 2024 புதன்
20
மார்ச்
2024
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் – 20-ம் நாளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷ ராசி அன்பர்களே!
உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு நீண்டநாள்களாகத் தொடர்பில் இல்லாத நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக் கும். திடீர் செலவுகளும் ஏற்படும். இன்று அம்பிகையை தரிசிக்க நற்பலன் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.

ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசி அன்பர்களே!
இன்றைக்கு புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. சிலருக்கு நண்பர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார். பணிச்சுமை அதிகரிப்பதால் சற்று சோர்வு உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறு மையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். முருகப்பெருமான் வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களே!
தெய்வ அனுகூலம் நிறைந்த நல்ல நாள். மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். பிள்ளைகளின் உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனு கூலமாக முடியும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற் பட்டிருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத் தான் இருக்கும். அம்பிகையை வழிபடுவது நன்மை தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களே!
செலவுகள் அதிகரிக்கும் நாள். என்றாலும் தேவையான பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. நண்பர் களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்கு தாரர்களால் அனுகூலம் உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களே!
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.காரியங்கள் அனுகூலமாகும். சில ருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். பிள்ளைகள் தங்கள் பிடிவாதப் போக்கை மாற்றிக்கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் உற்சாகமாகச் செயல்படுவார்கள். விநாயகர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களே!
பல வகைகளிலும் அனுகூலமான நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். ஆனாலும் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவ சியம். தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். வியாபாரத்தில் எதிர் பார்த்தபடியே விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சக வியாபாரிகள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சி தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண்அலைச்சலுடன் வீண் விவாதங்களையும் தவிர்க்கவும்.

துலாம் ராசி பலன்
துலா ராசி அன்பர்களே!
உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உங்கள் முயற்சியில் எதிர்ப்புகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். துணிச்சலுடன் முடிவு எடுக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும். சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களே!
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக கணவன் – மனைவிக்கிடையே பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு நலம் சேர்க்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களே!
பதற்றம் தவிர்த்து எதிலும் நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். சிலருக்குத் தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண் சச்சரவுகள் ஏற்படும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலர் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழி பாடு செய்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

மகர ராசி அன்பர்களே!
தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும். தேவையான பணம் கிடைக் கும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிற்பகலுக்கு மேல் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபா ரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். பைரவரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும்.

கும்பம் ராசி பலன்
கும்பராசி அன்பர்களே!
காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படும். அடிக்கடி மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற் பட்டு நீங்கும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாப மும் அதிகரிக்கும் என்றாலும், பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். இன்று வீரபத்திரரை வழிபட எதிலும் வெற்றியே கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்லவர்களின் நட்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

மீனம் ராசி பலன்
மீனராசி அன்பர்களே!
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர் கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் உங்கள் யோசனைக்கு முக்கி யத்துவம் தருவார்கள். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியா பாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். விநாயகர் வழிபாடு தடைகளை அகற்றும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.

ஜோதிட ஶ்ரீ

Related Posts

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை
ஆன்மீகம்

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

February 15, 2026
மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!
ஆன்மீகம்

மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!

December 22, 2025
பரணி_தீபம் வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்?
ஆன்மீகம்

பரணி_தீபம் வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்?

December 2, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Recent News

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version