நீண்ட நாட்களாக தம்பி ஹரி மற்றும் அவரது மனைவி மேகனிடம் பேசாமலே இருந்த இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும், தற்போது அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளார்கள்.
ஹரியின் வருத்தம்
தன் பிள்ளைகளால் இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர் மற்றும் பிற உறவினர்களின் பிள்ளைகளை சந்திக்கமுடியவில்லையே என்னும் வருத்தமும், ஈஸ்டர் பண்டிகையின்போது கூட அவர்கள் தனியாகவே இருக்க நேர்ந்ததால் ஏற்பட்ட வருத்தமும் ஹரியை வாட்டி வதைக்கின்றனவாம்.
இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரிடமிருந்து ஒரு நல்ல செய்தி
இப்படிப்பட்ட சூழலில், இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட் தரப்பிலிருந்து ஹரி மேகன் தம்பதியருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம், இளவரசர் ஹரி இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளுக்காக பிரித்தானியா வரும்போது, அவரும் மேகனும், தங்கள் பிள்ளைகளான குட்டி இளவரசர்கள் ஆர்ச்சியையும் லிலிபெட்டையும் பிரித்தானியாவுக்கு அழைத்துவருமாறு கோரியுள்ளார்களாம் வில்லியமும் கேட்டும்.
ஆக, சகோதாரர்களுக்கிடையே நிலவும் பிளவை சரி செய்வதற்கான முயற்சியை வில்லியம் கேட் தம்பதியர் துவக்கியுள்ளதுபோல தெரிகிறது.
LS











Discussion about this post