மொனராகலை வெல்லவாய, ஹந்தபானகல – கென்ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தனது தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது பெய்த கடும் மழை காரணமாக, அவர்களுக்குக் குடை ஒன்றைக் கொடுப்பதற்காக சென்ற போதே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
23 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
👉↪ மின்னல் நேரத்தில் செய்ய வேண்டியவை (பாதுகாப்பு விதிகள்)
🛑 முதலாவதாக வீட்டிற்குள் இருங்கள்:
இடிச் சத்தம் கேட்டால் அல்லது மின்னல் வெட்டினால் உடனடியாகப் பாதுகாப்பான கட்டிடத்திற்குள் செல்லுங்கள். “மழை நின்ற பிறகு வெளியே வரலாம்” என்பதே சிறந்த கொள்கை.
🛑 திறந்த வெளிகளைத் தவிர்க்கவும்:
வயல்வெளிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் கடற்கரை போன்ற திறந்த இடங்களில் நிற்பது அல்லது நடப்பது மிக ஆபத்தானது.
🛑 மரங்களின் கீழ் நிற்காதீர்கள்:
மழையில் நனையாமல் இருக்க மரத்தடியில் ஒதுங்குவது உயிருக்கு ஆபத்து. மரங்கள் மின்னலை எளிதில் ஈர்க்கும்.
🛑 உலோகப் பொருட்களைத் தவிருங்கள்:
குடை, துவிச்சக்கர வண்டி (Bicycle), மோட்டார் சைக்கிள் அல்லது விவசாயக் கருவிகள் போன்ற உலோகப் பொருட்களை மின்னல் நேரத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
🛑 மின்சாதனங்கள்:
இடி மின்னலின் போது அலைபேசியைப் பயன்படுத்துவதையோ அல்லது மின்சார இணைப்பில் இருக்கும் கருவிகளைத் தொடுவதையோ தவிர்க்கவும்.



Discussion about this post