Wednesday, April 15, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

by editor
April 14, 2026
in இலங்கை
0 0
A A
0
நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்
Share on FacebookShare on Twitter

நுவரெலியாவில் மாநகரசபையால் வருடந்தோறும் நடத்தப்படும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வார விடுமுறையையொட்டி வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கையின் அழகை மெருகூட்டும் இடங்களில் ஒன்றாக நுவரெலியா மாவட்டம் கருதப்படுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் அதுவும் ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டு விடுமுறை மற்றும் வசந்த காலம் கொண்டாடப்படுவதால் திரளான மக்கள் வந்து இயற்கையை ரசித்துச் செல்வது வழக்கமாக உள்ளது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நுவரெலியா பிரதான நகர் கிரகரி வாவி, ஹக்கல பூங்கா, விக்டோரியா பூங்கா, உலக முடிவு, சீத்தாஎலிய கோவில், வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து காணப்படுகின்றன மேலும் பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து வருகின்றனர் .

இயற்கை எழில் சூழ்ந்த நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவும் இதமான கால நிலையை அனுபவித்ததோடு பிரதான பூங்காக்களில் உள்ள புல் மைதானத்தில் ஓய்வெடுத்தும், அங்கு பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசித்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர் .

இவ்வாறு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் நுவரெலியா – பதுளை, நுவரெலியா – கண்டி நுவரெலியா – ஹட்டன் போன்ற பிரதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது,

குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துவருகின்றனர்.

டித்வா புயலினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்கவும் வருவாயின்றி வெறிச்சோடிய அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. பல்பொருள் வர்த்தக நிறுவனங்கள், சிறு கடைகள் என அனைத்தும் இயங்குவதால் பல்லாயிரக்கணக்கான வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள் மீண்டும் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.

Related Posts

முஜிபுர் CID யில்
இலங்கை

முஜிபுர் CID யில்

April 14, 2026
புறக்கோட்டை பேருந்து நிலைய பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவருக்கு விளக்கமறியல்
இலங்கை

புறக்கோட்டை பேருந்து நிலைய பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவருக்கு விளக்கமறியல்

April 12, 2026
பராபவ தமிழ் சித்திரைப் புத்தாண்டு சுப நேரங்கள்
இலங்கை

பராபவ தமிழ் சித்திரைப் புத்தாண்டு சுப நேரங்கள்

April 12, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

April 14, 2026
நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

April 14, 2026
இஸ்லாமாபாத்தில் மீண்டும் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை? பாகிஸ்தான் விடுத்த அதிரடி அழைப்பு!

இஸ்லாமாபாத்தில் மீண்டும் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை? பாகிஸ்தான் விடுத்த அதிரடி அழைப்பு!

April 14, 2026
ஐந்து நாடுகளிடம் இழப்பீடு கேட்கும் ஈரான்

ஐந்து நாடுகளிடம் இழப்பீடு கேட்கும் ஈரான்

April 14, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version