Friday, May 1, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home ஆன்மீகம்

நமக்கெல்லாம் எங்கே சொந்த வீடு அமையப் போகிறது என்று சோர்ந்து விட்டீர்களா? இனி அந்த கவலையை விட்டு விட்டு, இதை மட்டும் தவறாமல் செய்து வாருங்கள், நீங்கள் சொந்த வீட்டில் வாழும் யோகம் விரைவில் உங்களை தேடி வரும்.

by editor
November 12, 2022
in ஆன்மீகம்
0 0
A A
0
நமக்கெல்லாம் எங்கே சொந்த வீடு அமையப் போகிறது என்று சோர்ந்து விட்டீர்களா? இனி அந்த கவலையை விட்டு விட்டு, இதை மட்டும் தவறாமல் செய்து வாருங்கள், நீங்கள் சொந்த வீட்டில் வாழும் யோகம் விரைவில் உங்களை தேடி வரும்.
Share on FacebookShare on Twitter

தன் வாழ்நாளில் சம்பாதித்து சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் இன்றைய நடுத்தர குடும்பங்களின் பெரும் கனவாக இருக்கிறது. அந்த கனவை நிறைவேற்ற அவர்கள் அல்லும் பகலும் படாத பாடு பட்டு உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் தான் இப்படி வாடகை வீட்டிலிருந்து கஷ்டப்பட்டு வாழ்கிறோம் நம் குழந்தைகள் ஆவது நல்ல நிலையில் வாழ வேண்டும் என்று நினைத்து தினம் ஓடும் பல்லாயிரக்கணக்கான பெற்றோர்களின் எண்ணங்களையும், நிறைவேற்ற அவர்களின் முயற்சியோடு சேர்த்து இந்த ஒரு எளிய பூஜையை செய்தால் கூடிய சீக்கிரம் அவர்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் வரும்.

அது என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். ஒரு மனிதனுக்கு முதல் கோவில் தான் வாழும் வீடு தான். வீடு என்பது ஒரு சாதாரண விஷயம் கிடையாது எங்கு சென்றாலும் ஊர், ஊராக சுற்றினாலும், கடைசியில் நம் வீடு வந்து சேர்ந்தால் கிடைக்கும் அந்த மன நிம்மதி எங்கும் கிடைப்பதில்லை. அதனால் தான் வீட்டை கோவிலும் சமம் என்று சொல்கிறார்கள். அத்தகைய மன நிம்மதி தரும் வீடு, சொந்தமாக நமக்கென்று ஒன்று இருக்க வேண்டும் என்று எண்ணம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. வீடு இருப்பவர்களுக்கே மேலும், மேலும் சேர்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும் போது, தினம் தினம் வாடகை வீட்டில் இருந்து கஷ்டப்படுபவர்களுக்கு இந்த எண்ணம் வருவது ஒன்றும் தவறில்லை.

அந்த எண்ணத்தை நிறைவேற்ற இந்த ஒரு சிறிய பூஜையை நம்பிக்கையோடு தொடர்ந்து செய்து வரும் போது அவர்களின் எண்ணங்களுக்கு மேலும் சக்தி அளித்து சீக்கிரமாக வீடு கட்டும் யோகம் கிடைக்கும் அது பூஜை என்னவென்று இப்போது பார்க்கலாம். இந்த பூஜைக்கு தேவையானது புதிதாக வாங்கிய செங்கல் ஒன்று, ஆலங்குச்சி, அரசங்குச்சி, தர்ப்பை, பட்டு நூல். இந்த பூஜை செவ்வாய்க்கிழமை அன்று செய்தால் மிகவும் நல்லது. செவ்வாய்க்கிழமை என்பது முருகருக்கு உகந்த நாள். வீடு கட்டும் யோகம் வர வணங்க வேண்டிய கடவுளும் அவரே. எனவே செவ்வாய்க்கிழமை அன்று காலையில் குளித்து முடித்த பிறகு உங்கள் பூஜை அறையில் இந்த செங்கலை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து இந்த ஆலங்குச்சி, அரசங்குச்சி, தர்ப்பை மூன்றையும் அதில் வைத்து பட்டு நூலை வைத்து நன்றாக கட்டி ஒரு மனை வைத்து அதன் மேல் இந்த செங்கலை நிறுத்தி வைத்து விடுங்கள். அதற்கு பூ வைத்து தீபாரதனை காட்டி ஊதுபத்தி ஏற்றி வைத்து தினமும் வணங்கி வாருங்கள். நீங்கள் வணங்கும் போது நான் சீக்கிரம் வீடு கட்ட வேண்டும் என்று எண்ணத்தையும் அதில் விதைத்து வணங்கி வாருங்கள். நீங்கள் எதிர்பார்க்காததை விட சீக்கிரமாக உங்கள் எண்ணம் நிறைவேறும்.

அதன் பிறகு வீடு கட்டும் போது நீங்கள் வணங்கிய இந்த செங்கலை வைத்து உங்கள் வீடு கட்டும் பணி ஆரம்பிங்கள். இந்த செங்கலை வீடு கட்ட ஆரம்பித்த உடன் அங்கு மறக்காமல் கொண்டு வைக்க வேண்டும். இந்த பூஜை நிச்சயம் உங்களின் கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கும். நம்பிக்கையோடு பூஜை செய்து சொந்த வீடு கட்டி அதில் நிம்மதியாக வாழும் யோகத்தை பெறுங்கள்.

Related Posts

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை
ஆன்மீகம்

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

February 15, 2026
மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!
ஆன்மீகம்

மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!

December 22, 2025
பரணி_தீபம் வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்?
ஆன்மீகம்

பரணி_தீபம் வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்?

December 2, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026
டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்

டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்

May 1, 2026
மாவில் ஆறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுபோகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது.

மாவில் ஆறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுபோகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது.

May 1, 2026
பிரதமரைச் சந்தித்தார் நேபாளத் தூதுவர்..

பிரதமரைச் சந்தித்தார் நேபாளத் தூதுவர்..

May 1, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version