மாத்தளை உக்குவெல பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்து தாய் மற்றும் பிள்ளைகள் மூவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில் மூன்றரை வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில், அவனது இறுதிக் கிரியைகள் இன்று (16) இடம்பெறவுள்ளன.
தாக்குதலுக்குள்ளான தாயும் அவரது மற்றைய இரண்டு பிள்ளைகளும் மாத்தளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பணத்தகராறு காரணமாக சந்தேகநபர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்றிரவு சந்தேகநபரின் வீட்டுக்குள் புகுந்த சிலர், அவரது வீடு மற்றும் அங்கிருந்த முச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிள் என்பவற்றுக்கு தீ வைத்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீயினால் சந்தேகநபரின் வீட்டின் சொத்துக்கள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




Discussion about this post