பண்டாரகம – களுத்துறை பிரதான வீதியின் மொரோந்துடுவ பிரதேசத்தில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 18 வயதுடைய வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் வேறு சில இளைஞர்கள் குழுவுடன் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த போது, இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த இருவருடன் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஏனைய இளைஞர்கள் விபத்தை அடுத்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞர்களை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இது தொடர்பில் மொரோந்துடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Discussion about this post