கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊரெழு மேற்கு பொக்கனை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் தாய் , மகன் மற்றும் வீட்டிற்கு அருகில் வசிக்கும் அயலவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து 15 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.




Discussion about this post