Tuesday, July 28, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

P 627 கப்பல் “விஜயபாகு” என்ற பெயரில் துறைமுக அதிகார சபைக்கு ஜனாதிபதி கையளித்தார்

by editor
November 22, 2022
in இலங்கை
0 0
A A
0
P 627 கப்பல் “விஜயபாகு” என்ற பெயரில் துறைமுக அதிகார சபைக்கு ஜனாதிபதி கையளித்தார்
Share on FacebookShare on Twitter

அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு” என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் அதிகார சபைக்குகையளிக்கும் நிகழ்வு, இன்று (22) மாலை கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தில் இடம்பெற்றது.

கடல் பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான கடல்சார் சவால்களை முறியடிக்கும் வகையில் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் இந்தக் கப்பல் அமெரிக்க கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

விசேட கடற்படை வாகனத் தொடரணியில் விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கடற்படையினரின் விசேட மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

கப்பலை, அதிகார சபைக்குகையளிப்பதற்கான பத்திரத்தை கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திஸாநாயக்கவிடம் ஜனாதிபதி கையளித்தார்.

பின்னர் “விஜயபாகு” என பெயரிடப்பட்ட கப்பலின் பெயர்ப்பலகை மற்றும் உத்தியோகபூர்வ சின்னத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களும் கப்பலை பார்வையிட்டதுடன், கப்பலின் நினைவுப் புத்தகத்தில் நினைவுக் குறிப்பையும் இட்டார்.

இதன்பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு கடற்படைத் தளபதி விசேட நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார்.

 “Hamilton Class High Endurance Cutter” வகை கப்பல்களுக்கு சொந்தமான இரண்டாவது கப்பல் என்ற வகையில், இலங்கை கடற்படைக்கு கிடைத்த இந்த கப்பல் 115 மீட்டர் நீளம் கொண்டது. அதிகபட்ச வேகம் மணிக்கு 29 கடல் மைல்கள் ஆகும். இந்தக் கப்பல் ஒரே நேரத்தில் குறைந்தது 14,000 கடல் மைல் தூரம் வரை கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் திறன் கொண்டது. மொத்தம் 187 கப்பல்களுடன் செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய கடற்படை தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வசதிகளையும் இந்தக் கப்பல் கொண்டுள்ளது.

மேலும், இந்தக் கப்பல் அமெரிக்காவின் கடலோர காவல்படையின் கீழ் இருந்தபோது, அந்​​நாட்டின் கடற்பகுதியில் நடந்துவந்த சட்டவிரோத மீன்பிடித்தல், சட்டவிரோத கடற்பயணம், மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக சிறப்பு பங்களிப்பை வழங்கியது.

P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பலைப் இலங்கை கடற்படை பெற்றுக்கொண்டதில் இருந்து அதன் கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திஸாநாயக்கவின் மேற்பார்வையில் கப்பலின் முதல் பணியாளர்கள் 130 பேர் கொண்ட குழுவினருக்கு சுமார் 10 மாதங்கள் கப்பல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதோடு இலங்கை கடற்படையின் தேவைக்கேற்ப கப்பலின் செயல்பாடுகள் நவீனமயப்படுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சன்ங், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, பொலிஸ் மா அதிபர் சி. டி.விக்ரமரத்ன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்
இலங்கை

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

July 18, 2026
சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்
இலங்கை

சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

July 18, 2026
ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு
இலங்கை

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 17, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022
ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

October 4, 2023

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

July 18, 2026
சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

July 18, 2026
ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 17, 2026
உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்

உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்

July 16, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version