இரத்தினபுரி ஹம்பேகமுவ ஆரம்பப் பாடசாலையில் குரங்குகளின் தொல்லையால் மாணவர்கள் கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வகுப்பறைகளுக்குள் படையெடுக்கும் குரங்குகள் பாடசாலை மாணவர்களை கடித்து குதறுவதாகவும்,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மதிய உணவுப் பொட்டலங்களை கபளீகரம் செய்வதுடன், புத்தகங்கள் மற்றும் பைகளை கிழித்து எறிவதாக தெரிவிக்கப்படுகின்றது .
பாடசாலையின் வகுப்பறைகளுக்குள் நுழையும் குரங்குகள் புத்தகப் பைகளை கிழித்தெறிகின்றன . பைகளில் உணவுப் பொட்டலங்கள் இருந்தால் பிய்த்து உதறி உண்கின்றன . சிறு குழந்தை தனியாக பிடிபட்டால் கடித்து குதறுகின்றன . இத்தனை சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப முடியாதுள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.






Discussion about this post