மக்களை அச்சத்திற்குள்ளாக்கி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மக்கள் பலியாகக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டால் அடுத்த வருடத்தில் நாளாந்தம் 06 தொடக்கம் 08 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.






Discussion about this post