யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வீட்டில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்தவேளை, குறித்த குழந்தை விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், திடீரென குழந்தையை காணாதமையால், பெற்றோர் தேடிய வேளை, குழந்தை குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.
இதையடுத்து, உடனே குழந்தையை மீட்டு, ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தை அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிகிச்சைப் பலனின்றி 6ஆம் திகதி குறித்த குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






Discussion about this post