வைகோவின் கேள்விக்கு ஜெய்சங்கர் பதில் வழங்கல்
இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வராவிட்டால், அது அண்டை நாடு என்ற ரீதியில் இந்தியா தனது பொறுப்புகளை புறக்கணித்துவிட்டதாக கருதப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்திய பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசாங்கம் தற்போது அந்தப் பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




Discussion about this post