ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மறுதினம் மாலை 5.30 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உள்ளிட்ட தமிழ் தேசிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post